கடையநல்லூர் அதிமுக வேட்பாளரை இன்னும் தொகுதி பக்கம் ஆளை காணோமே…

கடையநல்லூர் அதிமுக வேட்பாளரை இன்னும் தொகுதி பக்கம் ஆளை Amoxil No Prescription காணோமே…
கடந்த 24 மணி நேரத்தில் 4 முறை வேட்பாளர் பட்டியலை மாற்றியமைத்துள்ளார் ஜெயலலிதா., இதன் மூலம், 13 வேட்பாளர்கள் பந்தாடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முதல் திடீர், திடீரென அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

இன்னும் எத்தனை முறை வேட்பாளர் பட்டியல் மாறும் என்பது தெரியவில்லை. வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில், திடமான ஒரு முடிவை எட்ட முடியாமல் அதிமுக தலைமை தடுமாறுவது குறித்து சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.

கடந்த 24 மணி நேரங்களுக்குள்ளாக, 13 வேட்பாளர்களை தூக்கியடித்துவிட்டு, புதிதாக 13 வேட்பாளர்களை பட்டியலில் சேர்த்துள்ளது அதிமுக தலைமை. மாற்றம் செய்யப்படுவதற்கான காரணமும் மக்கள் மன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே, வேட்புமனு தாக்கல் முடியும்வரை எதையும் உறுதியாக கூற முடியாதே என்ற கிலியில் அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கடையநல்லூர் வேட்பாளரும் விதிவிலக்கல்ல.

இந்த நிலையில் கடையநல்லூர் தொகுதி  அதிமுக வின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில முஸ்லீம் லீக்  தலைவர் ஷேக் தாவூத் அவர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக உள்ளூர் வாசிகளுக்கு வாய்ப்புகள் வழங்கபடாதது மற்றும் கடையநல்லூரில் உள்ள இஸ்லாமிய கட்சிகளின் எதிர்ப்பு போன்றவற்றால் இவரும் மாற்றப்படலாம் என பேச்சுக்கள் உலாவருகின்றன.

அதனால்தான் என்னவோ ,ஷேக் தாவூத் அவர்களை டிவி நிகழ்சிகளில் மட்டும்தான் பார்க்கமுடிகிறது. கடையநல்லூர் பக்கம் இன்னும் ஆளை காணவில்லை.

பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள் அதிமுக அபிமானிகள்.

கடையநல்லூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் வேறு வேட்பாளர் அறிவிப்பு வெளிவருமா இல்லை ஷேக் தாவூத் தான் வேட்பாளரா என்று.

Add Comment