மண மண்டபத்தில் ஏசி வசதி இல்லாததால் திருமணம் ரத்து!

திருமண மண்டபத்தில், “ஏசி’ வசதி இல்லாததால், மணமகன் வீட்டார் ரகளையில் ஈடுபட்டனர். திருமணம் ரத்து செய்யப்பட்டது.

மணமகன் ஹூப்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் அமீத். மணப்பெண் பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் சுவேதா. இவருக்கும் பெங்களூரு பசவேஸ்வர நகரிலுள்ள கல்யாண மண்டபத்தில் நேற்று வரவேற்பும், இன்று திருமணமும் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

திருமண மண்டபத்தை முன்பதிவு செய்யும் போது, பெண் வீட்டார், மாப்பிளை வீட்டாரையும் அழைத்து திருமண மண்டபத்தை காண்பித்து, அவர்களின் சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.

திருமணத்துக்காக பெண் வீட்டார், 10 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.டி.ஏ., Buy Cialis மனை, ஒரு கார், 300 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி நகைகள், பாத்திரங்கள் மற்றும் ஏராளமான சீர்வரிசைகள் செய்வதாக ஒப்புக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று திருமண வரவேற்புக்காக மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்கு வந்தனர். அப்போது தான் பிரச்னை ஆரம்பமானது. மண்டபத்தில் எவ்வித வசதியும் இல்லை. எங்களுக்கு, “ஏசி’ வசதி கண்டிப்பாக வேண்டும் என, மாப்பிள்ளை வீட்டார் அடம் பிடித்தனர். இது போன்று, ஒவ்வொன்றையும் குற்றமாக கருதி, குறை கூறி வந்தனர்.

இதனால் பெண் வீட்டார் வருத்தமடைந்தனர். பெண்ணின் சித்தப்பா லோகேஷ், மாப்பிள்ளை காலில் விழுந்து, அனைத்தையும் மறந்து, கல்யாணத்தை நடத்துவோம் என கெஞ்சினார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் மனமிறங்கவில்லை. தொடர்ந்து அடம்பிடித்து கொண்டே இருந்தனர். இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. வாக்கு வாதம் முற்றி, ரகளை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினும் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டனர். திருமண மண்டபம் போர்க்களமாக காட்சியளித்தது. நாற்காலிகள் பறந்தன. சீர்வரிசை பொருட்கள் தூக்கி வீசப்பட்டன. ஒரே கூச்சலும், குழப்பமுமாக காணப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணப்பெண் சுவேதா, இந்த திருமணம் எனக்கு வேண்டவே வேண்டாம். திருமணத்திற்கு முன்னதாகவே, மாமியாரின் செயல் இப்படி உள்ளதே? என் எதிர்காலம் என்னவாகும்?. இவர்களை நம்ப முடியாது என, திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்.

அதே நேரத்தில், மணமகன் டாக்டர் அமீத், நடந்தவைகளையெல்லாம் மன்னித்து விடுங்கள். எனக்கு சுவேதாவை திருமணம் செய்து வையுங்கள். அவரை கண்கலங்காமல் காப்பாற்றுவேன். உங்கள் (பெண்) வீட்டிற்கே வந்து விடுகிறேன், என்று உருகினார்.

Add Comment