கடையநல்லூரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு முழு நிலவரம்

orgec

2011 சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கூட்டணிகள் களத்தில் இருந்தன.

திமுக தலைமையிலான கூட்டணியில காங்கிரசு, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை இடம் பெற்றிருந்தன.

இவ்விரு கூட்டணிகள் தவிர பாஜக, ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்த மூன்றாவது கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது.

வேறு சில சிறிய கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலினால் முன்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது; மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்தது.

2011 சட்டமன்றத் தேர்தலில்

அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 80794

திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 64708

பாஜக பெற்ற வாக்குகள் 3233

எஸ்டிபிஐ சார்பில் போட்டியிட்ட முகமது முபாரக் 6649 ஓட்டுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக ,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அந்த கூட்டணியில் இல்லை .

மேலும் புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன.

அதைப்போல திமுக கூட்டணயில் 2011 தேர்தலில் இடம்பெற்ற  பாமக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இந்தமுறை திமுக கூட்டணியில் இல்லாமல் தனிய போட்டியிடுகின்றன.

2011 தேர்தலை கணக்கிடுகையில், இந்த வருட தேர்தல் திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள புதிய தமிழகம் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லீம் லீக் என்ற பலமான அணியால் கடையநல்லூரில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் கடையநல்லூர் தொகுதியில் எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள் கணக்கெடுப்பு

kdnl_voters

கடையநல்லூர் தொகுதி பெருவாரியான முஸ்லீம் வாக்களர்களை கொண்ட தொகுதி என்பதால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள இரு முஸ்லீம் கட்சிகளும் இங்கு நேரடியாக களம் காணுகின்றன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்  ஷேக் தாவூத் இங்கு போட்டியிடுகிறார்.

ஷேக் தாவூதின் வெற்றி வாய்ப்பு எப்படி? 

திமுக கூட்டணியிலிருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி கண்டிப்பாக தனித்து போட்டியிடும் அப்படி போட்டியிட்டால் முஸ்லீம்களின் கணிசமான வாக்குகள் பிரிக்கப்பட்டு வெற்றி எளிதாகிவிடும்.

இவருக்கு சில பாதகமான விஷயங்கள் என்னவென்றால், அதிமுக சார்பில் பலர் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர்.இதில் பலர் முஸ்லீம்கள் . ஒவ்வொரு முறையும் அதிமுக பொதுசெயலாளர் செயலலிதா வேட்பாளரை மாற்றி அறிவிப்பு வெளியிடும்போதும் தங்கள் தொகுதிக்கும் வேட்பாளரை மாற்றி அதிமுகவை சேர்ந்த உள்ளூர் நிர்வாகி ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த Cialis No Prescription நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இது தேர்தலில் எதிரொலித்தால்shek தாவுதிர்க்கு வெற்றி கொஞ்சம் கடினம்.

கடையநல்லூர் மக்களுக்கு அறிமுகம் இல்லாத நபர். சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியில் இஸ்லாமிய அமைப்புகள்  முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது தவறு என்று வாதிட்டவர்.மேலும் கடையநல்லூரில் உள்ள முஸ்லீம்கள் பலர் இணையதளங்களில் இவருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவது போன்ற காரங்களால், ஷேக் தாவூத் வெற்றி என்பது கேள்வி குறி.

முஸ்லீம் லீகின் வெற்றி வாய்ப்பு எப்படி

எஸ்டிபிஐ கட்சி கண்டிப்பாக தனித்து போட்டியிடும் அப்படி போட்டியிட்டால் முஸ்லீம்களின் கணிசமான வாக்குகள் பிரிக்கப்படும்.

ஆனாலும் கூட கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சைபுன்னிசா வெற்றி பெற்றார்.

அதிமுகவில் இடம்பெற்றுள்ள முஸ்லீம்களை தவிர மீதமுள்ள முஸ்லீம்களின் ஓட்டு முஸ்லீம் லீகிற்கு விழுந்தால் கண்டிப்பாக முஸ்லீம் லீக் எளிதாக வெற்றி பெரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

முஸ்லீம் லீக் சார்பில் நெல்லை மஜீத் அல்லது ஷிபா மருத்துவமனை நிறுவனர் ஷாபி என இருவரில் யார் வேட்பாளராக அறிவிக்கபட்டால் முஸ்லீம்  லீகிற்கு வெற்றி நிச்சயம்.

நல்லூரான்

Add Comment