மக்கள் நல கூட்டணி சீரழிந்த கதை

மக்கள் நல கூட்டணி சீரழிந்த கதை

சென்னையிலும் கடலூரிலும் பெரிய மழை பெய்து பெருத்த சேதம். அம்மாவின் ஆணைப்படி செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாக திறந்து விட்டு சென்னை மழையில் தப்பித்த பகுதிகளையும் மூழ்கடித்தனர். இந்த நேரத்தில் பலர் வீதியில் இறங்கி மனிதாபிமான உதவிகளை தாராளமாக செய்தனர். அரசியல் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு நிவாரண உதவிகளை செய்தனர். அப்பொழுது வைகோ திருமா கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவானது தான் கடைசியில் தேர்தல் கூட்டணியாக உருவாகி மக்கள் நல கூட்டணி என்று பெயர் பெற்றது. திமுகவோடு இந்த தேர்தலில் கூட்டணி வைப்பார்கள் என்று கருதப்பட்ட திருமா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்த கூட்டணியில் இணைத்ததன் மூலம் இது திமுகவுக்கு எதிரான கூட்டணி என்றும் இந்த கூட்டணியை அமைக்க வைகோவுக்கு அதிமுக பணம் கொடுத்தது என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதற்கு எந்த ஒரு. ஆதாரமும் இல்லை. திமுகவினர் ஒரு படி மேலே போய் இது அதிமுக – பி டீம் என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

மக்கள் நல கூட்டணி – அருமையான துவக்கம்.
இந்த விமர்சனங்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்த கூட்டணி சில நல்ல முடிவுகளை எடுத்தது. தமிழக அரசியலில் இது வரை விவாதத்துக்கு வராத கூட்டணி அமைச்சரவையை மக்கள் நல கூட்டணி அமைக்கும் என்று அறிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் கிடையாது. நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து தேர்ந்தெடுப்பவர் தான் முதல்வர். தேர்தலுக்கு பிறகு அவரை தேர்ந்தெடுப்பது தான் உண்மையான தேர்தல் ஜனநாயகம் என்று அறிவித்தனர். இதை திமுக அதிமுகவினர் கேலி கிண்டல் செய்தாலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் மக்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆராக்கியமான முயற்சியை வெகுவாக பாராட்டினர். மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்ற விவாதங்களும் நடைபெற துவங்கின. தமிழக அரசியலில் இது ஒரு நல்ல மாற்றத்துக்கான அறிகுறி என பலரும் எண்ணினர்.

சறுக்கல் ஆரம்பம்:
தங்களுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு மகிழ்ந்த வைகோ இது தான் சரியான சந்தர்ப்பம், இந்த நேரத்தில் நாம் சரியான அரசியல் செய்தால் திமுக அதிமுக கட்சிகளை ஒரே நேரத்தில் வீழ்த்தலாம் என்று கணக்கு போட ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தேமுதிக திமுக கூட்டணி பேச்சுவார்த்தகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த விஜயகாந்த் திமுகவிடம் கடினமான பேரங்களை முன்வைக்கிறார். வெற்றிக்கு Buy Levitra பின் அதிமுகவிடம் அடி வாங்கியது போல நாளை திமுகவிடமும் அடி வாங்க கூடாது என்று முடிவெடுத்த அவர் தேமுதிக ஆதரவில்லாமல் திமுக ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் சரிக்கு சமமாக தொகுதிகளை கேட்டார். நம்மை விட்டால் விஜயகாந்துக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த திமுக அவருக்கு பிடி கொடுக்கவில்லை. தேமுதிகவுக்கு செக் வைப்பதற்காக மக்களிடம் முழுக்க முழுக்க ஆதரவை இழந்த காங்கிரசுடன் கூட்டணியை புதுப்பித்தனர். அதன் பிறகு தான் தேமுதிக டீம் மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தது. பிரேமலதா வைகோ சந்திப்பு நடைபெற்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கின. மறுபக்கம் பிஜேபி கட்சியுடன் பேசத்துவங்கினர். இப்படியாக மூன்று பக்கத்திலும் கூட்டணி பேசி தன்னுடைய மட்டமான அரசியல் வியாபாரத்தை தேமுதிக துவங்கியது. ஒரு வழியாக வைகோ அதில் வெற்றியும் அடைந்தார். ஆனால் அதற்க்காக அவர் கொடுத்த விலை தான் இன்று அந்த கூட்டணியின் பெரிய தோல்வி.

தேர்தல் பல்டி:
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது தேர்தல் ஜனநாயகம் இல்லை என்று தீர்க்கமாக கூறியவர்கள் விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர். அவரை கிங்காக்க நாங்கள் நால்வரும் கிங் மேக்கர்களாக உழைப்போம் என்று வைகோ அறிவித்தார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும் போதே விஜயகாந்த காதில் ரசகியமாக கூட்டணி அமைச்சரவைக்கு சம்மதம் தானே என்று கேட்டு அனுமதி வாங்குகிறார். அதாவது அது வரை ப்ரேமலதாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அது குறித்து பேசாமல் கடைசி நேரத்தில் காதில் கிசு கிசுத்து முடிவு எடுக்கிறார்.
குறைந்த பட்ச செயல்திட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அது அனைத்தும் விஜயகாந்த் முடிவு என்று அறிவிக்கிறார். மேலும் அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைகோவும் திருமாவும் பேசிய பேச்சும், சிரித்த சிரிப்பும் அவர்களை அது வரை ஆதரித்த அனைவருக்கும் ஒரு அருவருப்பை ஏற்படுத்தின. அதுவும் அந்த பீமன் கதை உச்சகட்ட அவமானம்.
மக்கள் நல கூட்டணி என்ற அர்த்தமுள்ள பெயரை கேப்டன் விஜயகாந்த் அணி என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவித்தார்.
கடைசியாக பேசிய விஜயகாந்த் உதிர்த்த முத்து தான் அருமையானது. என்னை கிங் ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் உடனே கூட்டணிக்கு சரி என்று சொல்லிவிட்டேன் என்று முடித்தார்.

குழப்பங்கள்:
கூட்டணி அறிவிப்புக்கு பிறகு விஜயகாந்த் காணாமல் போய் விட்டார். முழுக்க முழுக்க பிரேமலதா மட்டுமே அனைத்தையும் முன்னின்று நடத்தினார். நடுவில் ஒரு கூட்டத்தில் அவர்கள் அணியின் அரசியல் சாணக்கியன் சுதீஷ் மைக் பிடித்து நீங்கள் எங்கள் விஜயகாந்தை முதல்வர் ஆக்கினால் நாங்கள் வைகோவை துணை முதல்வர் ஆக்குவோம், திருமாவை கல்வி மந்திரி ஆக்குவோம், கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அவர்கள் விரும்பும் இலாகாவை கொடுப்போம் என்று உலரித்தள்ள அதை மேடையில் வைகோவும் திருமாவும் மகிழ்ந்து ரசிக்க அடுத்த நாள் அந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் சிரிப்பாய் சிரித்தது. உடனே வைகோ அடுத்த மேடையில், சுதீஷ் யாரையும் கேட்காமல் அவ்வாறு அறிவித்து விட்டார். அந்த செய்தி தவறு. எனக்கு துணை முதல்வர் ஆசை துளியும் கிடையாது என்று கதறினார்.

முற்றுப்புள்ளி:
கடைசியாக சந்திரகுமார் விவகாரம் இந்த கூட்டணியின் சுயரூபத்தை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டிவிட்டது. தேமுதிக மநகூ அணி தேர்தலில் எந்த வெற்றியும் பெறாது என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக விஜயகாந்த ஆதரவாளர்களிடம் தலை தூக்க ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக சந்திரகுமார் அணி உள்கட்சி விவகாரங்களை பொது வெளிக்கு கொண்டு வந்து அனைத்தையும் அம்பலப்படுத்தியது. விஜயகாந்த் திமுக கூட்டணியை விரும்பியது, பிரேமலதா வைகோவுடன் கூட்டணி அமைத்தது, தேமுதிகவில் போட்டியிட விரும்பியவர்கள் பின் வாங்கியது என்று பல உண்மைகள் வெளிவர, இந்த விஷயங்களை திசை திருப்ப வைகோ கருணாநிதி அட்டாக் என்ற ஆயுதத்தை எடுத்து அதை விவாத பொருளாக மாற்றுகிறார். அதற்கு அவரே மீண்டும் மன்னிப்பு கேட்டு தொடர்ந்து சந்திரகுமார் விஷயத்தை திசை திருப்புகிறார். ஆனால் மக்கள் நல கூட்டணியை ஆரம்பித்த போது இவர்களுக்கு இருந்த ஆதரவு இன்று பல மடங்கு குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. திமுக அதிமுக அரசியலை விரும்பாதவர்கள் அதற்கு எந்த வகையிலும் மாறுபடாத தேமுதிகவை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதிலும் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்பது மக்கள் நல கூட்டணியின் முடிவு அத்தியாயத்தை எழுதிவிட்டது.

நன்றாக துவங்கிய மக்கள் நல கூட்டணி விஜயகாந்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து சரணடைந்தது திமுக அதிமுக கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. போட்டி மீண்டும் திமுக அதிமுக எனற வட்டத்துக்குள் சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் வைகோ.
நன்றி அரசியல் நையாண்டி

Add Comment