குவைத் இந்திய தூதரகத்தின் தகவல் பலகையில் தமிழைக் காணோம்!

குவைத்தில் சுமார் ஆறு லட்சத்து அறுபதாயிரம் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் தமிழர்களாக இருக்கக் கூடும். பிழைக்க வந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் தமிழர்கள் நாடும் இடம் இந்திய தூதரகம் தான். Buy Doxycycline Online No Prescription திராவிடக் கட்சிகளின் தீவிர இந்தி எதிர்ப்பு கொள்கையால் இந்தியை கற்காத, இந்தியில் பேசத் தெரியாத தமிழர்கள் இங்கே தூதரகத்திற்கு சென்றால் அங்கே தமிழ் வழிகாட்டி பலகை இல்லை என்ற குறைபட்டுக் கொள்கின்றனர் தமிழர்கள்.

சமீபத்தில் தூதரகத்தில் உள்ள தகவல் பலகையை படமெடுத்த சகோதரர் அதை நமக்கு அனுப்பியிருந்தார். அதில் தமிழை தவிர மற்ற மொழிகளில் எழுதப்படிருந்தது. தமிழை செம்மொழியாக்கி விட்டோம் என்று பெருமிதப்படும் முதல்வர், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம் கண்ட முதல்வர், தூதரகத்தில் தமிழில் தகவல் பலகை வைக்கவும், தமிழில் ஒரு வழிகாட்டி[guide ] நியமிக்கவும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் முயற்ச்சிக்க வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறார்கள்.

Add Comment