கடையநல்லூர் வேட்பாளர் ஷேக் தாவுத் அவர்களுக்கு…

“திருவாளர் ஷேக் தாவுத் அவர்களுக்கு, தாங்கள் அம்மாவின் விசுவாசியாக கடையநல்லூரில் தேர்தல் களம் காண இருப்பதை அறிந்து அளவற்ற சந்தோஷம்.

தேசிய அளவிலான கட்சிகளும், மாநில அளவிலான பாரம்பரியமிக்க கட்சிகள் யாவும் கூட்டணியில் அங்கம் வகிக்க முடியாமல் சென்றுவிட்ட நிலையில் வெறும் “லெட்டர் பேட்” கட்சியாக இருந்துக் கொண்டு நீங்கள் தலைவராகவும், உங்கள் மகள் ரேஷ்மா துணை பொதுச் செயலாளராகவும், மற்றும் சில குடும்ப அங்கத்தினர்களை வைத்துக் கொண்டு கட்சி நடத்தும் தாங்கள் அதிமுகவின் கூட்டணிக் கட்சியாய் அங்கீகாரம் பெற்று, ஒரு சீட்டு வாங்கி தேர்தல் கிணற்றில் குதித்திருப்பது உண்மையிலேயே பெரிய சாதனைதான்.

இந்த சாதனை பலருக்கும் சாத்தியப்படாதது. “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளத் தெரிந்த” உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த சாதனைக்கு நீங்கள் எந்த அளவுக்கு பிரயத்தனம் செய்து, ஜால்ரா அடித்து, அம்மாவின் துதிபாடி, ‘தங்கத் தாரகை’யின் இதயத்தில் தனியொரு இடம் பிடித்து இருப்பீர்கள் என்பதை நன்றாகவே உணர முடிகிறது.

நீங்கள் அம்மாவின் தலையாய விசுவாசியாக இருப்பது உங்களது தனிப்பட்ட உரிமை. அதை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. உங்களது தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் விளம்பரத்தில் “மூமீன்களின் முதல்வர்” என்று உங்களை நீங்களே அழைத்துக் கொண்டு போஸ்டர் அச்சடித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

மாவீரர் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை முஸ்லீம்கள் “அமீருல் மூமினீன்” என்ற அடைமொழியிட்டு கெளரவிக்கிறார்கள். “உம்முல் மூமினீன்” என்ற அடைமொழி கொடுத்து அன்னை ஆயிஷா (ரலி), அன்னை பாத்திமா போன்றவர்களை அழைக்கின்றோம்.

“முமீன்களின் முதல்வர்” என்று உங்களை நீங்களே அழைத்துக் கொண்டு உண்மையான மூமீன்களின் தலைவர்களை நீங்கள் அவமதிப்பதாகவே தோன்றுகிறது. அப்படி உங்களை அழைத்துக்கொள்ள உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதை நான் தெரிந்துக் கொள்ளலாமா?

முதன்மையான மூமீனாக இருக்கக்கூடிய யோக்கியதை என்ன இருக்கிறது என்பதை அறிய மிகுந்த ஆவலாக இருக்கிறேன். திருமறையை கையில் ஏந்திகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதினால் மட்டும் அந்தத் தகுதியை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் அறியாமையேத் தவிர வேறில்லை.. “அமீருல் மில்லத்” என்ற பட்டத்தை போட்டுத்தான் நீங்கள் உங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள்.

இந்தப் பட்டத்தை யார் உங்களுக்கு கொடுத்தது என்பதை நான் அறிந்துக் கொல்ளலாமா? “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் கொடுத்தவரம்” – இது உங்கள் கட்சி போஸ்டரில் நான் படித்த வாசகம். இது உங்களுக்கே “ஓவராகத்” தெரியவில்லையா? வரமாக வந்த தேவதை ஏன் அப்பாவி மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும்?

அப்படிப்பட்ட கொடியவர்களையா Doxycycline No Prescription இறைவன் வரமாக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப் போகிறான்? இஸ்லாமிய மக்களை பாதுகாக்க வந்த (?) “மூமீன்களின் முதல்வர்” என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் நீங்கள் மதுவை ஆதரித்து காணொளியில் பேசுகிறீர்கள்.

இட ஒதுக்கீட்டை இஸ்லாமிய மக்கள் கேட்கவில்லை இயக்கங்கள்தான் கேட்கிறது என்கிறீர்கள். எந்த சிலை வணக்கத்தை எதிர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்களோ அந்த மார்க்கத்தைப் பின்பற்றும் நீங்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு கும்பிடு போட்டு வணங்குகிறீர்கள். உலகத்திலேயே ஆபத்தானவர்கள் யார் தெரியுமா..? சுயநலத்திற்காக, மார்க்கத்தை விற்று, பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காண்பிக்கும் உங்களைப் போன்ற முனாஃபிக்குகள்தான்.

– அப்துல் கையூம்”

Add Comment