கடையநல்லூர் முஸ்லீம் லீக் வேட்பாளர் பற்றிய முழு விபரம்

கடையநல்லூர் திமுக கூட்டணி முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வாழ்க்கை குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கே.எல்.டி. அஹ்மது-டி.ஒ. அஹ்மது
ஆய்ஷா ஆகிய தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக கே.ஏ.எம். முஹம்மது
அபூபக்கர் 06.09.1971 அன்று பிறந்தார். ஆன்மீக செல்வர்களான செய்கு
சதக்கத்துப்பா அப்பா, உமர் வலி குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு செய்யது
பாத்திமா என்ற மனைவியும், அஹ்மது முஹிய்யத்தீன் என்ற மகனும் உள்ளனர்.
படிப்பு
12ம் வகுப்பு வரை காயல்பட்டினம் முஹிய்யத்தீன் மெட்ரிக்குலேஷன்
மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளிக்கூடத்தில் வகுப்பு தலைவராகவும்,
பள்ளிக் கூட அணி தலைவராகவும் இருந்ததோடு, தமிழக அரசு நடத்திய பள்ளிக்
கூடங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் மண்டல அளவில் வெற்றி வீரராக
விளங்கினார். நகரில் முஹம்மதன் ஸ்போர்டிங் கிளப் உருவாக்கி சிறந்த
கால்பந்தாட்ட வீரராக விளங்கியுள்ளார். சென்னை புதுக்கல்லூரியில்
பி.எஸ்.சி. (வேதியியல்) படித்தார்.
பொதுப்பணி
1988ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் கடும் தண்ணீர் பஞ்சம், தொடர் மின்சார
தடை, சுகாதாரக்கேடு என சமூக பிரச்சினைக்களுக்கு விடியலை தேடி தன்
நண்பர்களோடு ‘ காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு’ என்ற பொது நலசங்கத்தை
உருவாக்கி மின்சார தட்டுப்பாட்டை போக்கிட புதிய டிரான்ஸ்பாரம், லாரிகள்
மூலம் buy Bactrim online குடி தண்ணீர் வினியோகம், மயான பகுதிகளை சுத்தம் செய்தல் என்பன
போன்ற பணிகளில் ஈடுபட்டு தனது பொது வாழ்க்கை துவங்கினார்.
அரசியல் பணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னாள் மாநில பொருளாளர், காயிதே
மில்லத் அவர்களின் உற்ற தோழர் எஸ்.எம்.கே. மஹ்மூது லெப்பை இவரின் மாமா,
காயல் நகர தலைவர் எஸ்.எம்.கே. தைக்கா உமர் இவரின் பாட்டனார், தியாகி
பி.எச்.எம். அப்துல் காதர் இவரது உறவினர். முஸ்லிம் லீக் குடும்பத்தில்
பிறந்த இவர் 1986ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில்
உறுப்பினரானார்.
சென்னை கல்லூரி வாழ்க்கையில் 1990ஆம் ஆண்டு அன்றைய தலைவர் அப்துஸ் ஸமது
அவர்களின் அறிமுகம், இன்றைய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
அவர்களுடன் தொடர்பால் முஸ்லிம் லீகில் முழுமையாக ஈடுபடலானார்.
1990ஆம் ஆண்டு சென்னை பெரியமேடு பிரைமரி கிளை செயலாளர், 23.10.1991 அன்று
சென்னையில் மாணவர்களை ஒன்று திரட்டி ‘ மாணவர் பேரவை’யை தமிழகத்தில்
துவங்கி அதன் மாநில அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து
1994ஆம் ஆண்டு முஸ்லிம் இளைஞர் லீகின் தேசிய செயல்பாட்டிற் குழு
உறுப்பினர்.
2008ஆம் ஆண்டில் மாநில தலைமை நிலைய செயலாளராகவும், 11.07.2009 முதல்
மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி வருகின்றார். மணிச்சுடர் தமிழ்
நாளிதழின் நிர்வாக இயக்குனர் மற்றும் வெளியீட்டாளராக 06.11.2009 முதல்
பணியாற்றி வருகின்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்
தேசிய-மாநில-மண்டல மாநாடுகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
தெரிந்த மொழிகள்
தமிழ், ஆங்கிலம், மலையாளம், உர்தூ, ஹிந்தி, அரபி, கஜக்.
சென்ற நாடுகள்
தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான்,
சவூதி அரேபியா, ஓமன், புரூனை, குவைத்.
சமூகப்பணிகள்
இவரின் பெரும் முயற்சியால் இக்ரா கல்வி சங்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான
ஏழை மாணவர்கள் உயர் கல்வி உதவி பெற்று வருகின்றனர். இவர் 2012ஆம் ஆண்டு
மத்திய அரசின் மனித வள அமைச்சக்கத்தின் சிறுபான்மை கல்வி மேம்பாட்டு குழு
தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2011ஆம் ஆண்டு
காயல்பட்டினத்தில் தமிழ் இலக்கிய மாநாடுக்குழு பொதுச்செயலாளராக
பொறுப்பேற்று வெற்றி மாநாடாக நடத்தினார்.
2011ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அவர்களின்
விருந்தினராக இந்திய குழுவின் சென்று புதிய ஹஜ் கடமையை நிறைவேற்றும்
வாய்ப்பை பெற்றார்.
லட்சியம்
சாதி-இன-மதங்களை கடந்த அனைவர்களும் இருக்க இடம், குடிநீர், மின்சாரம்
பெற்று சுகாதாரத்தோடு வாழ வேண்டும் என்பதே இவரின் லட்சியமாகும். இதை
செயல்படுத்தும் விதத்தில் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கடலூர்
மாவட்டத்தில் இவரின் தூண்டு கோலால் துவக்கமாக பல சமய மக்களுக்கான பல
லட்சம் செலவில் 40 கருனை இல்லங்கள் கட்டிக் கொடுக்கும் பணிகள்
துவங்கப்பட்டுள்ளது. கருனை இல்லங்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும்
கட்டிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.
சமூக நல்லிணக்கம் தழைக்க நாளும் உழைத்து வருகின்றார். ஒழுக்கத்தோடு கூடிய
கல்வியை அனைவர்களும் பெற்று உயரிய சமுதாயத்தை உருவாக்குவதே இவரின்
லட்சியமாகும்.

Add Comment