ஆங்கிலத்தில் பேச வைத்துவிட்டால் ஒரு சொல்லுக்கு ஒரு இலட்சம் பரிசு!

“ஆங்கிலத்தில் ஒரு சொல் பேச வைத்து விட்டால் 1 இலட்சம் ரூபாய் பரிசு” என அதிரடியாக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்க உள்ள உலக கன்னட மாநாட்டில் தான் பார்வையாளர்கள், பொதுமக்களை நோக்கி இப்படி ஒரு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

“கன்னடம் பேசு, காசள்ளி வீசு” என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி போல் அலட்டிக்கொள்ளாமல் ஹுப்ளியைச் சேர்ந்த தேவபஜ்ஜா என்கிற ஒரு சாமியார் இப்படி Amoxil online ஒரு திறந்த போட்டியை அறிவித்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். “கன்னடமோ, மாராத்தியோ, ஹிந்தியோ நான் பேசும் போது, ஒரு சொல், ஒரே ஒரு சொல்லாவது ஆங்கிலத்தில் என்னைப் பேச வைத்துவிட்டாலும், அப்படி பேசச் செய்பவருக்கு ஒரு சொல்லுக்கு ஒரு இலட்சம் என்று கொடுப்பேன்” என்று கூறியுள்ள தேவபஜ்ஜா,

“ஐந்து ஆண்டுகளுக்கு முன் பொதுக் கூட்டங்களில் தூய கன்னடத்திலும் மராட்டியிலும் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டேன். இப்போது இப்படிப் பேசுவதில் நன்கு தேறி விட்டேன். அதனால் தான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன்” என்கிறார்.

தனக்கு ஆங்கிலம் நன்கு தெரியுமென்றும், அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ஆங்கிலப் புதினம் வரை தான் படித்துள்ளதாகவும் கூறும் தேவபஜ்ஜா, அதற்காக தாய்மொழியுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதைத் தான் ஆதரிப்பதில்லை என்றார்.

“நாங்கள் சிறுவயதில் இருக்கையில், போலிஸ், சினிமா என்று ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்கள் தாம் புழங்கின. ஆனால் இன்றோ…கணக்கு வழக்கில்லாமல் ஆங்கிலத்தையே தாய்மொழி போல பேசுகிறார்கள்” என்று வருத்தப்படும் தேவபஜ்ஜா, “தாய்மொழிப்பேச்சு தழைக்க என்னால் ஆன ஒரு சிறு முயற்சி இது” என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

Add Comment