கடையநல்லூர் முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு கோரி சவுதியில் கூட்டம்

12994291_1378430915516168_1676056434609470715_nதிமுக கூட்டணி சார்பில் கடையநல்லூரில் போட்டியிடும் முந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று(16-04-2016) ஷரபிஃயா இம்பாலா கார்டன் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது..

வேட்பாளர் அபூபக்கர் அவர்களின் சகோததர் ஜனாப் அகமது ஏற்பாடு செய்திருந்தார். அபுபக்கர் அவர்களின் கடந்தகால பணிகளை விவரித்தார்கள். மேலும் அலைப்பேசிமூலம் அபுபக்கர் அவர்கள் சிற்றுரையாற்றினார். காவாவின் தலைவர் மக்தூம் ஜஹான் அவர்கள் கடையநல்லூரிலுள்ள தற்போதுள்ள பிரச்சனைகள் எடுத்துரைத்தார்.

மேலும் கடையநல்லூருக்கு தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கான Buy cheap Viagra கலைக்கல்லூரி மற்றும் மாணவர்களுக்கான தொழில்பயிற்ச்சி கல்லூரியை அமைப்பதற்கு காவாவின் கடந்தகால முயற்ச்சிகளை விளக்கி அதனையே வேண்டுகோளாக்கினார்.

மேலும் தற்போதைய டெங்கு காய்ச்சலுக்கு தீர்வுகானும்படி வேண்டுகோள் வைத்தார். ஜித்தா திமுக ஒருங்கிணைப்பாளர் திரு. விஜயன் அவர்கள் வேட்பாளருக்கு வாழ்த்துகூறி அவரின் வெற்றிக்கு இங்குள்ள கடையநல்லூரை சார்ந்த திமுக கழக உடன்பிறப்புகளுடனும் இதர ஊர் திமுக கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாய்வு மேற்கொண்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கழக மற்றும் கூட்டனி வேட்பாளர்களின் வெற்றிக்கான தனது பங்களிப்பை விளக்கினார்.

ஜனாப் ரிஃபாய் அவர்கள் அபுபக்கர் அவர்களின் கட்ந்தகால பணிகளை விவரித்தார் மற்றும் ஜனாப் உவைஸ் அவர்கள் காயலில் தற்போதைய தொழிற்சாலை, மது மற்றும் அனல்மின்நிலைய பிர்ச்சனைகளுக்கு முஸ்லீக் எந்த முயச்சிகள் மேற்கொண்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விகளுக்கு அகமது அவர்கள் பதிலளித்தார் மேலும் காயல்நகரில் டாஸ்மாக் இல்லையென்பதை விளக்கினார். அவரின் நன்றியுரையுடன் இரவு விருந்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.

ஜித்தாவிலிருநது Mydeen Saif

Add Comment