அடேய் உங்களுக்கும் எங்க திருநெல்வேலிக்கும் என்னடா தொடர்பு

அடேய் உங்களுக்கும் எங்க திருநெல்வேலிக்கும் என்னடா தொடர்பு இதுல எவனாவது திருநெல்வேலி காரண் இருக்கானா..? இல்ல இது வரை திருநெல்வேலிக்கு நடிகர் சங்கம் சார்பா எதாவது உதவி செஞ்சிங்களா..? கொஞ்ச நாளைக்கு முன்னாடி தாமிரபரணி காப்பாத்த எங்க ஊர் மக்கள் போராட்டம் செஞ்சாங்களே அப்போ வந்து எட்டி பார்த்திங்களா..? இல்ல அதற்கு ஆதரவா எதாவது பேட்டி கொடுத்திங்களா..?அப்புறம் என்ன உரிமை இருக்குன்னு எங்க ஊரு பெயருல விளையாடுறிங்க..?

இதுல ஒரு கொடுமை என்னனா மதுரை காளைஸ் ன்னு ஒரு டீம் விளையாடுது அதோட கேப்டன் சொல்றாரு தமிழ்நாட்ல மதுரை தான் கெத்து மதுரைல பெரியார் பஸ் ஸ்டாண்டு நான் அங்க தான்டா நிக்குறேன் வாடா ன்னு யாரையோ வம்பும்கு கூப்பிடுறான் அடேய் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மதுரையில ஜல்லிகட்டுக்கு போராட்டம் நடந்ததே அப்போ எங்கடா போனிங்க..?

Buy Doxycycline style=”text-align: justify;”>நலிந்த நடிகர்களுக்காக பன்றோம்… விளையாடுறோம் னு சொல்றிங்க நல்ல விஷயம் தான் அப்படி நலிந்த நடிகர்களை எதாவது ஒரு அணியில் விளையாட வைக்கலாமே ஏன் அவங்களை இதுல ஒதுக்கி வைக்கிறிங்க..? நலிந்த நடிகர்கள் யாருக்கும் கிரிக்கெட் என்பது தெரியாது போலும்…!

மக்கள் எல்லாம் சினிமா கிரிக்கெட்டுக்கு அடிமையா இருக்குறத இவங்க சரியா பயன் படுத்துறாங்க… இனியும் இவர்களுக்கு கொடி பிடிக்குறதையும், பாலபிஷேகம் பண்ணுவதை நிறுத்துங்கள் அந்த பாலை ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள் மனதார வாழ்த்துவார்கள்… அப்படியே பாலபிஷேகம் பண்ண வேண்டும் என்றால் அந்த நடிகரிடம் பணம் வாங்குங்கள் அவர்கள் கட்டடம் கட்ட நம்மிடம் பணம் வசூலிப்பதை போல..!

Fans of Tirunelveli

Add Comment