
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிலையில் வேட்பாளர் அறிவித்த பின் வேட்பாளர் அபூபக்கருடன் மீண்டும் ஒருமுறை சந்தித்து ஆதரவு கோரினர்.
Buy Doxycycline width=”1280″ height=”856″ class=”alignnone size-full wp-image-48210″ />
கடையநல்லலூர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முகம்மது அபூபக்கர் நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது மாவட்ட தலைவர் முகம்மது பைஷல் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்து அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் விளக்கியதை போல் இவர்களிடமும் விளக்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் தாஹா,மாவட்ட பொருளாளர் அப்பஸ்,பஜார் கிளை பொறுப்பு தலைவர் குறிச்சிசுலைமான், டவுன் கிளை செயலாளர் நாசர், மதினா நகர் தலைவர் பாதுஷா ஆகியோர் இருந்தனர்.
அதைபோல் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நகர திமுக செயலாளர் சேக் உதுமான் சேகனா , காங்கிரஸ் நகர தலைவர் அசன் இப்ராஹீம், புதியதமிழகம் நகர செயலாளர் ராஜன் ,முஸ்லிம் லீக் நிர்வாகிகள் செய்யது மசூது,அப்துல் லத்தீப் ஹபிபுல்லாஹ், ஆகியோர் உடன் வந்தனர்.