கடையநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம்அரசியல் கட்சிகள் தீவிரம்

கடையநல்லூர் பகுதிகளில் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சுவர்களுக்கு கடும் “கிராக்கி’ ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலை முன்னிட்டு அரசு சுவர்களில் வரையப்பட்டிருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் online pharmacy no prescription தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி சுவர் விளம்பரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலை, கடையநல்லூர் – செங்கோட்டை நெடுஞ்சாலை, சேர்ந்தமரம் மெயின்ரோடு உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் சுவர்களில் வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்களை எழுத திமுக கூட்டணி கட்சியினரும், அதிமுக கூட்டணி கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.சுவர் விளம்பரத்தை பொறுத்தவரை கடையநல்லூர் – செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை தனியார் சுவர்களுக்கு கடும் “கிராக்கி’ ஏற்பட்டுள்ளது.

Add Comment