கடையநல்லூர் கொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டி?சாதனைகள் குறித்த”சிடி’ தயாரிக்கும் பணி தீவிரம்

கடையநல்லூர் தொகுதியில் காங்., கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ போட்டியிடப்போவது உறுதியாகிவிட்ட நிலையில் தொகுதியில் மேற்கொண்ட சாதனைகள் குறித்த “சிடி’ தயாரிக்கும் பணிகள் காங்கிரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறுவதை அடுத்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., கட்சிக்கு தொகுதிகள் அறிவிக்கப்படாத நிலையில் கடையநல்லூர் தொகுதி சிட்டிங் காங்., எம்எல்ஏவான பீட்டர் அல்போன்சிற்காக ஒதுக்கப்படும் என தெரிகிறதுஏற்கனவே திமுக நேர்காணலின் போது அக்கட்சியினை சார்ந்தவர்கள் கடையநல்லூர் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அந்த தொகுதி காங்கிரசுக்கு தான் என திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினும் உறுதிபட தெரிவித்துவிட்டனர். இதனால் இத்தொகுதியில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் தான் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடப்போவது உறுதியாகிவிட்டது இதனையடுத்து காங்., கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கடையநல்லூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சாதனையாக காங்., கட்சியினரால் தேர்தலில் தெரிவிக்கப்பட உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் மலைப்பாதை,மற்றும் பல்வேறு திட்ட பணிகளை சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட சின்னதிரை குழுவினரால் படமெடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏவின் சாதனைகளை திமுக நிர்வாகிகள், காங்., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விளக்கிடும் வகையில் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. Cialis No Prescription இதற்கான பணிகளை காங்கிரசார் தொகுதி முழுவதும் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது

Add Comment