கடையநல்லூர் முஸ்லிம் லீக் வேட்பாளரை ஆதரித்து அபுதாபியில் ஆலோசனைக் கூட்டம்

அமீரக அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களை ஆதரித்து அபுதாபி காயலர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
DSC_9709

நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்று 5 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்தும், தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அபுதாபி காயலர்கள் ஆலோசனைக் கூட்டம் அபுதாபியில் உள்ள செட்டிநாடு உணவக அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு buy Bactrim online அய்மான் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீத் தலைமை வகித்தார்.

மௌலவி ஹாஃபிழ் இஸ்ஹாக் லெப்பை இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.

அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் கருத்துரை வழங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைமை நிலைய பேச்சாளரும், அய்மான் சங்க செயற்குழு உறுப்பினருமான லால்பேட்டை சல்மான் கடையநல்லூர் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளரின் மக்கள் நலப் பணிகள், சமுதாயப் பணிகள், இயக்கப் பணிகள் ஆகியவற்றை குறித்தும், வேட்பாளரின் வெற்றிக்கு பணியாற்றுவதை விளக்கியும் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய காயல் சகோதரர் ஏ.ஆர். ரிஃபாயி அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு காயலர் சார்பில் வரவேற்ப்பு அளித்ததை நினைவு கூர்ந்து, அரங்க நிறை நிகழ்வில் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் சட்டமன்றம் சென்று சிறுபான்மை சமுதாயத்தின் விடியலாக வரவேண்டும் என்றும், அமீரகம் வந்து சென்றவர்கள் எல்லாம் வெற்றி பெற்று சமுதாய நலப்பணிகளுக்கு தங்களை அர்ப்பணித்து கொண்ட வரிசையில் இவரும் தொடர வேண்டும் என்பதையும், கடைய நல்லூர் பெருமக்கள் இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்கவேண்டும் என உளமார வேண்டுகோள் வைத்து வேட்பாளரின் வெற்றிக்கு உதவிட வேண்டிக்கொண்டார் .

கடையநல்லூர் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எல்லா வகையிலும் ஆதரவு தெரிவித்து பணிகளை விரைவுபடுத்த இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அபுதாபி காயல் நலச் சங்க பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத், சுப்ஹான் N.M.பீர் முஹம்மத், M.O.அபூபக்கர்,,உமர், ஹுசைன் மக்கி ஆலிம், அபுதாபி கடற்கரை காயல் கால்பந்து கழக சகோதரர்கள், ஏ.ஆர். ரிஃபாயி, M.O.உமர் அன்சாரி உள்ளிட்ட எராளமான காயலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது

 

தகவல்: காயல் உமர் அன்சாரி

Add Comment