கடையநல்லூர் தொகுதிவாக்காளர்கள் நிலவரம்

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தொகுதியினை பொறுத்தவரை மறுசீரமைப்பிற்கு பின் செங்கோட்டை தாலுகா மட்டுமின்றி நகர பகுதியும் சேர்க்கப்பட்டு முதல் முதலாக தேர்தலை சந்திக்கிறது. இத்தொகுதியின் வாக்காளர் விபரம் வருமாறு:- ஆண் வாக்காளர்கள் – 1 லட்சத்து 5 ஆயிரத்து 647. பெண் வாக்காளர்கள் – 1 லட்சத்து 3 ஆயிரத்து 799. மொத்த வாக்காளர்கள் – 2 லட்சத்து 9 ஆயிரத்து 446. ஒன்றியம் / நகரம் – ஆண் – பெண் – மொத்தம் கடையநல்லூர் ஒன்றியம் – 21584 – 21648 – 43232 செங்கோட்டை ஒன்றியம் – 27439 – 26322 – 53761 தென்காசி ஒன்றியம் – 19944 – 19421 – 39365 கடையநல்லூர் நகரம் – 27862 – 27684 – 55546 செங்கோட்டை நகரம் – 8818 – 8724 – 17542 தொகுதியினை பொறுத்தவரை பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 122 பேர் அதிகமுள்ளனர். டவுன் பஞ்., வாக்காளர்களை பொறுத்தவரை அச்சன்புதூரில் ஆண் வாக்காளர்கள் 4145, பெண் வாக்காளர்கள் 4110, புதூர் டவுன் பஞ்.,சில் ஆண் – 3929, பெண் – 3779, ஆய்க்குடி டவுன் பஞ்.,சில் ஆண் – 4957, பெண் – 4580, சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,சில் ஆண் – 5520, பெண் – 5227, வடகரை Buy Levitra டவுன் பஞ்.,சில் ஆண் – 6423, பெண் – 6034, பண்பொழி டவுன் பஞ்.,சில் ஆண் – 3018, பெண் – 3107 வாக்காளர்கள் உள்ளனர். டவுன் பஞ்.,களை பொறுத்தவரை வடகரை டவுன் பஞ்.,சில் அதிகளவாக 12 ஆயிரத்து 457 வாக்காளர்களும், பண்பொழி டவுன் பஞ்.,சில் குறைந்தளவாக 6 ஆயிரத்து 125 வாக்காளர்களும் உள்ளனர்.

Add Comment