திமுக வுக்கு சாதகமாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்

ஆரம்பத்தில் அதிமுக விற்கு சாதகமான சூழ்நிலையில் இருந்த தமிழக தேர்தல் களம்,அரசியல் கட்சிகளின் அதிரடி பிரசாரங்களால் மாற தொடங்கியுள்ளது.அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் மக்கள் நல கூட்டணியால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பெரும்பாலான இடங்களில் பிரகாசமாக இருந்து வந்தது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில், அது படிப்படியாக குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

அதிமுகவின் பிரசார யுக்தியால் மக்கள் வெயிலில் வாடுவதும், இரட்டை பிரச்சார மேடை மற்றும் ஜெயலலிதாவின் சொகுசு பிரச்சாரம் போன்ற எதிர்ப்பலைகளை திமுக தங்களுக்கு சாதகமாக மாற்றி வருகிறது பார்க்க முடிகிறது.

இதன் எதிரொலியாக ஜெயலலிதா பிரச்சாரத்தில் ஒரே மேடையில் வேட்பாளர்கள் உட்கார வைக்கபடுகின்றனர். பிரச்சார நேரம் மாற்ற பட்டுள்ளது.

மாற்றம் என முழக்கமிட்டு மக்கள் நல கூட்டணி மற்றும் தேமுதிக , தாமாகா கூட்டணி . அதிமுக மற்றும் திமுக விற்கு ஈடு கொடுக்கும் எதிர்ப்பு அணியாக களத்தில் நிற்கும் மக்கள் நல கூட்டணியின் நிலைமை இன்று அதள பாதாளத்திற்கு சென்று சென்று கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் வேட்பாளர் என கூட்டணி Buy Lasix Online No Prescription கட்சி தலைவர்களால் முன்னிறுத்தப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தால் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றுமின்றி நடுநிலை வாக்காளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுவரை எந்த ஒரு பொதுகூட்ட மேடையிலும் என்ன பேச போகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை இஸ்டத்திற்கு பேசி , எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிக்கும் இவரின் பிரசாரம் மற்றும் பொது மேடைகளில் அநாகரிகமாக நடந்து கொள்வது என மக்களிடம் தினந்தோறும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டிருக்கிறார்.

ஒரு சிறு கூட்டத்தையே எதிர் கொண்டு சாமர்த்தியமாக சாதுர்யமாக நடந்து கொள்ள முடியாத ஒரு நபரால் எப்படி ஒரு அரசாங்கத்தை நடத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.இது அந்த கூட்டணிக்கு ஒட்டு போடலாம் என நினைத்த நடுநிலை வாக்காளர்களை பின்வாங்க செய்துள்ளது.

இந்த கூட்டணிக்கு பாடுபட்டு கட்சிகளை ஒருகிணைத்த வைகோ. இவரின் நிலைமை பரிதாபம்.அரசியல் மேடைகளில் கம்பீரமான இவரின் அரசியல் பேச்சுக்களை கேட்பதற்கே ஒரு கூட்டம் கூடும் எப்பொழுது என்றால் இவர் திமுகவில் இருந்த பொழுது. ஆனால் திமுகவில் இருந்து பிரிந்து சென்ற பின் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க முடியாமல் போனதால் இவரிடம் உள்ள பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியமாக , வைகோ திமுகாவை பரம எதிராயாக நினைக்க தொடங்கினார்.

அதன் முடிவுதான் இன்று மக்கள் நல கூட்டணி என உருவாக்கி தேமுதிக மற்றும் தமாகவை உள்ளே இணைத்து கொண்டு அதிமுகாவின் எதிர்ப்பு ஓட்டுக்களை கணிசமாக பிரிப்பதன் மூலம் திமுகாவின் வெற்றிவாய்ப்பை பறிக்க முடியும் என கருதி பல கட்ட மோதல்களை தொடங்க, அனைத்துமே தோல்வியில் முடிந்து இன்று இவரே தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து பின்வாங்கும் நிலையில் கொண்டு முடிந்திருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியை ஜாதி ரீதியாக விமர்சனம் செய்தததால் கூட்டணி கட்சி தலைவர்களிடமே எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மன்னிப்பு கேட்டு கொண்டார்.

அடுத்து தனக்கு எதிராக ஜாதி மோதல்களை தூண்டி விடுகிறது திமுக என கூறி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது, கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமின்றி , தொண்டர்களிடமும் ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

தன்னுடைய அரசியல் அறிவாற்றல் மூலமாக எந்தவொரு அரசியல் எதிரிகளையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட வைகோ எனும் புரட்சி புயல் இன்று புறமுதுகு காட்டி ஓடுவதை பார்க்கும் பொழுது ஜாதி மோதல் என்பதையும் தாண்டி தோல்வி பயமே மக்கள் மனதில் எழுகிறது.

அதிமுகவின் பி டீம்தான் மக்கள்நல கூட்டணி என ஆரம்பத்தில் ஏற்பட்ட விமர்சனம் இன்று இவரின் பின்வாங்கலால் உண்மையாக இருக்குமோ என மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

கணிசமான ஓட்டுக்களை பிரித்து திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தும் என எதிர்பாக்க பட்ட சூழ்நிலை மாறி நடுநிலை வாக்காளர்கள் திமுக பக்கம் சாய்வதை பார்க்க முடிகிறது.

மூன்றாவது அணி , மாற்றத்தை கொண்டு வரும் அணி என நடுநிலை வாக்காளர்களால் எதிர்பார்க்க பட்ட மக்கள் நல கூட்டணி இன்று முதன்மை வேட்பாளரே பின்வாங்கி தடுமாறி கொண்டிருபதால் திமுகாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதை காண முடிகிறது.

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் என இவர்களின் சூறாவளி பிரச்சாரத்தினால் அதிமுக மற்றும் திமுக என இரு அணிகள்தான் களத்தில் நிற்கின்றன என ஒரு தெளிவான நிலை ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒட்டு வங்கியோடு இன்று திமுக வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இன்னும் பல கட்ட பிரச்சாரங்கள் மீதமுள்ள நிலையில் தேர்தல் களம் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

நல்லூரான்

Add Comment