கடையநல்லூரில் கோவில் குருக்களின் ஆசிர்வாதத்தோடு ஷேக் தாவூத் வேட்புமனு தாக்கல்

கடையநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான தமிழ்மாநில முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் தாவூத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ஷேக் தாவூதுக்கு கடையநல்லூர் கோவில் அய்யர் ஒருவர் பூஜை செய்து பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டசபை தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Buy cheap Viagra

முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் ஷேக் தாவூத் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் இன்று கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி ரசுல்லா தாவூத் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ஷேக் தாவூதுக்கு கடையநல்லூர் கோவில் அய்யர் ஒருவர் பூஜை செய்து பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. இதனால் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment