கடையநல்லூரில் கனமழை மின்னல் தாக்கி 3 பேர் பலி

13151466_1554241794876463_666296890496409497_n

கடையநல்லூரில் இன்று இடியுடன் கூடிய கனமழையால், மின்னல் தாக்கி மேலக்கடையநல்லூரை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

மே 4 : கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கண்ணா தெருவை சார்ந்த மூன்று நபர்கள் காப்பு கட்டி கோயிலுக்கு விரதம் இருக்கிரார்கள் இன்று அக்கினி நட்சத்திரம் வெயில் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள குளத்தில் வழக்கம் போல் குளித்து கொண்டு இருந்தனர் அப்போது இன்று மாலை 5மணிக்கு திடீர் என இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது அப்போது குளத்தில் குளித்து கொண்டு இருந்த மாடசாமி மகன் சின்னராஜ் (17)முருகன் மகன் கருப்பசாமி என்ற சின்னராஜ்(18)முப்பிடாதி மகன் விஜய்(13) ஆகியோர் மீது மின்னல் தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி தண்ணீரில் முழ்கி இறந்தனர் தகவல் அறிந்த காவல் துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டனர் இதில் விஜய் என்பர் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஆவான் அப்பகுதியே சோகமயமானது.
செய்தி படம்: குறிச்சி சுலைமான்

FB_IMG_1462371446017FB_IMG_1462371443595FB_IMG_1462371440037

Comments

comments

Add Comment