துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை சார்பில் பேராசிரியர் சேமுமுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் கலந்துரையாடல்

துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலிக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி 01.03.2011 செவ்வாய்க்கிழமை மாலை ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் நடைபெற்றது.

அமீரக காயிதெமில்லத் பேரவை துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் இறைவசனங்களை ஓதினார். தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்களின் சமுதாயப் பணிகளை நினைவு கூர்ந்து பாராட்டினார். தாய்ச்சபை நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பான உரைகளை வழங்கி வருவதை நினைவு கூர்ந்தார்.

பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் அத்தாவுல்லாஹ் வாழ்த்துக் கவிதை வாசித்தார்.

பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்கள் தனது உரையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாய்ச்சபை ஊழியர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். எத்தகைய சூழ்நிலையிலும் பொறுமையினைக் கடைப்பிடிக்க வேண்டியது குறித்து விவரித்தார்.

பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி அவர்கள் பேராசிரியர் டாக்டர் Levitra online சேமுமு முகமதலிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், ஹமீதுர் ரஹ்மான், முஹம்மது ரஃபி, அப்துல் ரசாக், சுலைமான், ஹாஜா முஹைதீன், அபுசாலிஹ், ஷர்புதீன், ஷாகுல் ஹமீது, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான் நன்றியுரை கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

MUDUVAI HIDAYATH

Add Comment