கடையநல்லூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு .

கடையநல்லூரில் துணை ராணுவத்தினர் மற்றும் காவலர்களின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது.

தேர்தல் காலங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது பொதுமக்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிக்கவும், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுவோரை எச்சரிக்கும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி மே 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கடையநல்லூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

புளியங்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாதபிள்ளை , சொக்கம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முத்து லெட்சுமி டெல்லிருந்து வருகை தந்துள்ள துணை ராணுவப் படையைச் சேர்ந்த 120 வீரர்களும் என மொத்தம் 150 காவலர்கள் பங்கேற்றனர்.
செய்தி படம் குறிச்சி

IMG-20160505-WA0008IMG-20160505-WA0009

Add Comment