நெல்லையில் நடைபெற்ற ஜெ பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வார பத்திரிக்கை நிருபர்களுக்கு தடை..!

நெல்லையில் நடைபெற்ற ஜெ பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வார பத்திரிக்கை நிருபர்களுக்கு தடை..!

இன்று மாலை நெல்லையில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரச்சாரக்கூடத்திற்குள் செல்வதற்காக செய்தியாளர்கள் கூட நுழைவு வாயில் அருகில் சென்றதுமே எந்த பத்திரிக்கை என்று கேள்வி கேட்டனர் காவல்துறையினர் குறிப்பிட்ட சில பத்திரிக்கை நிருபர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஏன் அனுமதி இல்லை எனறு காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு பி.ஆர்.ஒ விடம் லிஸ்ட் வாங்கி வாருங்கள், லிஸ்டில் உங்கள் பத்திரிக்கை பெயரும், உங்கள் பெயரும் இருந்தால் அனுமதி உண்டு என்றார் அந்த அதிகாரி.பி.ஆர்.ஓ விடம் லிஸ்ட் வாங்கிச் செல்ல இது என்ன அரசு விழாவா???? கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு அரசு அதிகாரிகளே அடிமைகளாக செயல்படுகிறார்கள். தினகரன், சன் டி.வி, கலைஞர் டி.வி, நக்கீரன், ஜூ.வி, நெற்றிக்கண் ஆகிய ஊடகங்கள் தவிர மற்ற அனைத்து ஊடகங்களுக்கும் அனுமதி…!

Add Comment