கடையநல்லூர் தொகுதியில் வெற்றியை சாதிக்க சாதிய ஓட்டுக்கள் யார் பக்கம்?

கடையநல்லூர் தொகுதியில் வெற்றியை சாதிக்க சாதிய ஓட்டுக்கள் யார் பக்கம்?

ஓர் அலசல்

சுட்டெரிக்கும் வெயில் பயங்கர இடி மின்னலுடன் மழை என இயற்கையின் பரபரப்பிற்கிடையே சூறாவளிப் பிரச்சாரங்களையும் ஓட்டு வேட்டையையும் தீவிரப்படுத்திவரும் அரசியல் கட்சிகளும், தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படைகளை முடக்கி இடை, இடையே மின் தடைகளை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை சுதந்திரமாய் மேற்கொள்ளும் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களின் பலே கடமைகள் என தொகுதியே பெரும் கலகலப்பாயிருக்க உண்மையிலேயே எதை நம்பி தைரியமாய் களமிறங்கியுள்ளனர். வேட்பாளர்கள், என்றால் சாதனையும், சாதிக்க போகிற வாக்குறுதியும் ஒருபக்கம் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், உள்ளபடியே நேருக்குநேர் இங்கே களத்தில் மோதும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியும் தங்களுக்கென சில வியூக கணக்குகளை வகுத்தல் போட்டு வருகிறது என்னதான் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை இருவேட்பாளர்களும் நம்பினாலும் தொகுதி வாக்காளர்களைப் பொறுத்த வரையில் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதாலும் தொகுதியைக் சாராதவர்கள என்பதாலும் வாக்களார்கள் இந்த முறை சிதறவிடும் வாய்ப்பும் ரொம்பவே உள்ளது.

யார் பக்கம்?

அந்த வகையில் கடையநல்லூர் தொகுதியில் உள்ள 2,63,128 மொத்த வாக்காளர்களில் 54 ஆயிரத்து 430 இஸ்லாமிய சமூக வாக்களார்கள் முதலிடத்திலும் 46 ஆயிரத்து 126 தேவர் சமூக வாக்காளர்கள் இரண்டாவது இடத்திலும், 42 ஆயிரத்து 715 தேவேந்திர சமூக வாக்களார்கள் மூன்றாவது இடத்திலும் 24ஆயிரத்து 647 முதலியார் சமூக வாக்காளர்கள் நான்காவது இடத்திலும், 20 ஆயிரத்து 343 நாடார் சமூக வாக்காளர்கள் 5வது இடத்திலும், 18 ஆயிரத்து 216 யாதவ சமூக வாக்காளர்கள் 6வது இடத்திலும், 11 ஆயிரத்து 936 பறையர் சமூக வாக்காளர்கள் 7வது இடத்திலும் 5 ஆயிரத்து 694 நாயக்கர் சமூக வாக்காளர்கள் 8வது இடத்திலும், 5ஆயிரத்து 512 வணிக வைசியர் சமூக வாக்களார்கள் 9வது இடத்திலும்இ 4 ஆயிரத்து 869 விஸ்வகர்மா சமூக வாக்காளர்கள் 10வது இடத்திலும் 24 ஆயிரத்து 640 இதர சாதியினர் 11வது இடத்திலும் உள்ளனர். இதில் முஸ்லீம் லீக் கட்சி ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் மற்றும் தேவேந்திர குல சமூக வாக்குகளை பெரும்பான்மையாக நம்பி உள்ளது. அதே நேரத்தில் தமிழ் மாநில முஸ்லீம் லீக்கோ இஸ்லாமியர்களின் முழுமையான வாக்குகளை பெற முடியாது என்பதை நன்கு தெரிந்தாலும் அதிமுக வாக்குவங்கிகளை மட்டுமே நம்பியுள்ளது. அந்த வகையில் இந்து சமூகத்திலுள்ள பல்வேறு சமூக வாக்குகளை கணக்கீட்டு வெற்றிக்காய்களை அதிமுக தரப்பு நகர்த்தி வந்தாலும் பரவலாக அனைத்து சமூக வாக்குகளை பெறும் வகையில் தேமுதிகவும், அடுத்தபடியாக பாஜக மற்றும் பாமகவும் உள்ளது. அதே நேரம் கடந்த முறை ஆறாயிம் வாக்குகளை பிரித்ததால் திமுக கூட்டணி தோல்விக்கு காரணமாக அமைந்தது இம்முறையும் அதிக அளவில் வாக்குகளை பிரிப்பதால் மீண்டும் திமுக கூட்டனியை தோல்வி அடைய காரணமாக அமையும் என அதிமுக வினர் கருதுகிறார்கள் ஆனால் கடந்த முறை முஸ்லிம் சமுதாயம் என சொல்லி வாக்கு கேட்ட எஸ்டிபிஐ இம்முறை இருகட்சியிலும் கூட்டனி வேட்பாளர்கள் முஸ்லிம்களே போட்டியில் உள்ளதால் அதை சொல்லி வாக்கு கேட்கமுடியவில்லை எனவே எஸ்டிபிஐ அதிக வாக்குகளை பிரிக்க வாய்பில்லை என திமுக கூட்டணி வேட்பாளர் கருதுகிறார் அதே வேலை இந்த தொகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுகள் கனிசமாக உள்ளதால் அவர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லாததால் அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என புரியாத புதிராகவே உள்ளது இவர்களிடம் அனைத்து வேட்பாளர்களும் மீண்டும் மீண்டும் வாக்கு கேட்டு கொன்டே இருக்கிறார்கள். மறவர் வாக்குகளை பிரித்து செல்லும் வகையில் சுயேச்சை வேட்பாளரும், தமிழ் உணர்வாளர்கள் வாக்குகளை பெறும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியும், சொந்த பந்த வாக்குகளையாவது பெறுவோம் என்ற நம்பிக்கையில் இன்னும் சில சுயேச்சைகளும் வாக்கு கணக்குளை வகைப்படுத்தி கணக்கிட்டு வருகிறது. கடையநல்லூர் தொகுதியைப் பொறுத்தவரை முதல் மற்றும் மூன்றாம் நிலையிலுள்ள இருபெரும் சமூகங்களின் 85 சதவீகித வாக்காளர்கள் திமுக கூட்டணி பக்கமும், இரண்டாம் நிலை மற்றும் நான்கு, ஐந்து ஆறு நிலைகளில் உள்ள சமூக வாக்களார்கள்களில் 50 சதவீகிதத்தனரும் ஏனைய நிலைகளில் உள்ள சமூக வாக்காளர்களில் 20 சதவீகித வாக்காளர்கள் அதிமுக கூட்டணி பக்கமும், அனைத்தும் சமூகங்களிலுள்ள 2 சதவீகித வாக்காளர்கள் பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும், ஒரு சதவீகித வாக்காளர்கள் சயேச்சைகளுக்கு ஆதரவாகவும் உள்ளனர். என்பதே உண்மை. தொகுதியில் சாதிய வாக்குளின் ஆதரவில் துளிருமா? இரட்டை இலை ஏற்றம் பெறுமா? ஏணி, மலருமா? தாமரை, ஒலிக்குமா? முரசு? கனியுமா? மாம்பழம் என்பதை மே 19ந் தேதி தான் தெரியும்.
-குறிச்சி சுலைமான்.
உணர்வு செய்தியாளர்

Add Comment