2016 சட்டமன்ற தேர்தல் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கி யிருக்கிறார்கள்

2016 சட்டமன்ற தேர்தல் நேர்மறை முடிவுகள்…

பணநாயகம் என வாய் கிழிய கூவினாலும் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கி யிருக்கிறார்கள்.

தீர்ப்பு : 1
இரண்டாம் முறையாக வாய்ப்பளித்தன் மூலம் சென்ற ஆட்சி விட்டுச்சென்ற நிதிச்சுமையை காரணம் காட்டி எந்த கட்டணங்களையும் உயர்த்த இயலாது.

தீர்ப்பு : 2
சாத்தியமாக்க இயலாத தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்தையும் சாத்தியப்படுத்தியே ஆகவேண்டும்.

தீர்ப்பு – 3
மின்மிகை மாநிலமாக்கப்பட்ட தமிழ்நாடு என கூறப்பட்டு விட்டதால் மின்வெட்டு செய்ய இயலாது.

தீர்ப்பு : 4
சென்ற ஆட்சியின் பாதகத்தால்தான் இப்படி என இனி சட்டமன்றத்தில் எதனையும் சொல்ல இயலாது.

தீர்ப்பு : 5
கடந்த 30 ஆண்டுகளாக மாற்றி மாற்றி வாய்ப்பளித்ததால் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லுதல் பழி வாங்குதல் என காலத்தை கடத்தினர்.
இந்த முறை மக்கள் அந்த தவறை செய்யவில்லை.
இவைகளை விட சாதி மத இன கட்சிகளை தோற்கடித்ததன் மூலம் பிரிவினைகளை வளர்க்கும் சக்திகளை வெறுத்து மக்களின் ஒற்றுமை வென்றுள்ளது.
இவைகள் அனைத்தையும் விட மிகப் பலமான எதிர்க் கட்சி;

எதிர்க்கட்சியான திமுக விற்கு மக்கள் உணர்த்தியுள்ளது ..

தீர்ப்பு : 1
வயதையும் பொருட்படுத்தாமல் தெருத்தெருவாகச் சென்று மக்களை சந்தித்து நாங்கள் செய்தது தவறுதான் இனி அந்த தவறு நடக்காது என இளைஞர் போல சுறுசுறுப்பாக சுற்றி வத்து வாக்களித்தது .

தீர்ப்பு : 2
என்னதான் மன்னிப்பு கேட்டாலும் உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டச் செயளாலரும் குறுநில மன்னர்கள் போல செயல்பட்டதை மறக்க முடியவில்லை

தீர்ப்பு : 3
லஞ்சம் ஊழல் ஆடம்பர அரசியல் இப்படி அனைத்து சீர்கேடுகளுக்கும் அடித்தளம் அமைத்தது நீங்கள்தான் இப்போது அதிமுகவை நீங்கள் குறை சொல்வது சல்லடை ஊசியை பார்த்து உன்னிடம் ஓட்டை உள்ளது என சொல்வது போல் உள்ளது .

தீர்ப்பு : 4
கடைகள் தோறும் வியாபாரிகளிடம் கட்டாய வசூல் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து இதையெல்லாம் மக்கள் மறந்து விட நினைத்தாலும் முடியவில்லை .

தீர்ப்பு : 5
இதையெல்லாம் விட்டு விட்டு கடந்த எதிர்க்கட்சி போல இல்லாமல் எடுத்ததற்கெல்லாம் வெளிநடப்பு செய்யாமல் நல்ல ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் .
அத்தனையும் பார்க்கும் போது முதலமைச்சர் பதவி மட்டும் முள் கிரீடம் அல்ல எதிர்க்கட்சி பதவியும் முள் கிரீடமே ..
ஆளும் கட்சி எதிர்க்கட்சி இந்த இரண்டில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அதுதான் அடுத்த ஆளும் கட்சி என தெளிவாக மக்கள் முடிவெடுத்து தேர்தல் முடிவுகள் சிறப்பாக அமைந்து ஜனநாயகம் காப்பாற்றப் பட்டது.

நேர்மறை எண்ணங்களுடன் புதிய ஆட்சியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்….!

Add Comment