கடையநல்லூரில் மீண்டும் களம் இறங்கும் காங்கிரஸ்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் குறித்த விவரம் இன்று வெளியானது.

முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும் இடையே இன்று இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் உடன்பாடு கையெழுத்தானது. இதையடுத்து தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் கடையநல்லூர் உட்பட 63 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது …

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

1. கடையநல்லூர்
2. பூந்தமல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5. ராயபுரம்
6. அண்ணா நகர்
7. தியாகராய நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம் (தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம் (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகை
28. அவிநாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. நிலக்கோட்டை (தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாச்சலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைப்பூண்டி (தனி)
42. பாபநாசம்
43. Buy Bactrim Online No Prescription பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. திருத்தணி
59. நாங்குனேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

2 நாள் விருப்ப மனு தரலாம்:

தொகுதிப் பட்டியலை வெளியிட்டுக் கூறிய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் பெறப்படும். சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.

பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 5000 கட்டியும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு ரூ. 2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விருப்ப மனுக்களை ஐவர் குழு பரிசீலித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கும். வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Add Comment