கடையநல்லூரில் ஷேக் தாவூத் தோற்பதற்கு காரணம் உட்கட்சி பூசலா?

13233071_1167367509963755_6237904347793388539_nகடையநல்லூரில் ஷேக் தாவூத் தோற்பதற்கு காரணம் உட்கட்சி பூசலா?

கடையநல்லூரில் அதிமுக சார்பில் இரட்டை இல்லை சின்னத்தில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடையநல்லூரில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டு அமைச்சர்காளாகிய நாகூர் மீரான் மற்றும் மறைந்த செந்தூர் பாண்டியன் போனரவர்களை அடையாளம் காட்டிய தொகுதி கடையநல்லூர்.

கடையநல்லூர் தொகுதியில் அதிமுக கட்சிக்கு நல்ல வாக்கு வங்கிகள் இருந்தும் மேலும் பல முன்னணி முஸ்லீம் நிர்வாகிகளை கொண்ட தொகுதியாக இருந்தும், கடையநல்லூர் தொகுதி கூட்டணி கட்சியான ஷேக் தாவூதிர்க்கு ஒதுக்கபட்டது, அதிமுக வினரிடையே அவ்வப்பொழுது தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் விழைவு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஏற்ப்பட்ட சலசலப்பு மற்றும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காத ஒன்றிய செயலாளர்கள் போன்ற விஷயங்களால், அதுமுக வின் ஓட்டுக்கள் வேறு சில கட்சிகளுக்கு பிரிந்து சென்றுள்ளது.

தங்கள் கட்சியில் உள்ள யாரை வேட்பாளராக நிறுத்தினாலும்,உரிமையுடன் நட்பு பாராட்ட முடியும் என்ற காரணத்தினாலோ என்னவோ ரத்தத்தின் ரத்தங்கள் இந்த முறை ஷேக் தாவூதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

Add Comment