வைகோ’வை விமர்சிப்பவர்களே!!!!

வைகோ’வை விமர்சிப்பவர்களே!!!!

இன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் பல அறிவாளிகளால் மிக மோசமாக, தரக்குறைவாக விமர்சிக்கப்படுபவர் வைகோ.

அதற்காக அவர் செய்த தவறு மாற்று அரசியலை முன்னெடுத்ததுதான்.

அதுவும் தமிழக நலன் மீது மிகப்பெரிய அக்கறை கொண்ட மிக உத்தம கட்சிகளான அதிமுகவிற்கு 134, திமுகவிற்கு 98 தொகுதிகளை வாரிக் கொடுத்த பெருமிதத்தில் இருக்கும் உங்கள் பார்வைக்கு வைகோ அற்பமான மனிதனாகத்தான் தெரிவார். அதிலும் தமிழக மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட காங்கிரஸுக்கு 8 தொகுதி மட்டுமே கொடுக்க முடிந்த வருத்தத்தில் இருக்கும் உங்கள் பார்வைக்கு வைகோ கேவளமாகத்தான் தெரிவார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய முக்குளத்தோர் புலிப்படை தலைவர் அண்ணன் கருணாஸ் அவர்களைப் போன்ற திறமையானவர்களை தமிழக சட்ட சபைக்கு அனுப்பி வைத்த பெருமிதத்தில் இருக்கும் நீங்கள் வைகோவை எவ்வளவு தரக்குறைவாகவும் விமர்சிக்களாம்.

ரூபாய் 5000, 4000, 3000, 2000, 1000, 500, 250 அன்பளிப்பாக கொடுத்து மக்களை சந்தோசப் படுத்தி வாக்கு கேட்ட இரண்டு ஆண்ட கட்சிகள் முக்கியமா!!!! வாக்குக்கு எதையுமே கொடுக்காமல் உங்களிடம் வாக்கு பிச்சை கேட்ட பிச்சைக்கார கூட்டணியான தேமுதிக_மநகூ_தமாக முக்கியமா!!!!?? நீங்கள் சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் மக்களே!!!!! அதிலும் உங்களுக்கு கொடுக்க கொண்டு வந்த பணத்தை கொடுக்க விடாமல் தடுக்க முயற்சி செய்த வைகோ தண்டிக்கப்பட வேண்டியவர் தான்.

சில நூறு கோடிகளும், 50, 60 தொகுதிகளும் விஜயகாந்திற்கு கிடைக்க வேண்டியதை கெடுத்த வைகோவை நீங்கள் திட்டுவதில் தவறே இல்லை. ஏனென்றால் விஜயகாந்தின் மீது நீங்கள் பெரும் மதிப்பும், அக்கறையும் கொண்டிருக்கிறீகள் என்பது நாடறிந்த விசயம் தானே!!!!

கவுண்டமணி கல்லெடுத்துக் கொண்டு செந்திலை விரட்டுவதை, விஜயகாந்த வைகோவை விரட்டுவதாக கற்பனை செய்து மீமிஸ் போட்டு வலைதளத்தில் பதிவு செய்த அந்த அறிவாளிக்கும், அதை வேக வேகமாக மற்றவர்களோடு பகிர்ந்து கொண்ட புரட்சியாளர்களுக்கும், அதை பெருமிதத்தோடு காட்சி ஊடகத்தில் காட்டிய புதிய தலைமுறை சேனல் போன்ற காட்சி ஊடகங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் என்றால் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருப்பதால்தான் இவ்வளவு முக்கியமான செய்திகளை போடுகிறீர்கள். உங்களைப் போய் விஜயகாந்தும், வைகோவும் குறை சொல்வது தவறுதான்.

94 விவசாய சங்கங்கள் மக்கள்_நலக்_கூட்டணிக்கு ஆதரவு தருவதாக வைகோ வீட்டிற்கே சென்று சங்க நிர்வாகிகள் சொன்னார்கள், அதற்காக பல்லடத்தில் மிக பிரம்மாண்டமாக மாநாடு ஒன்றை நடத்தினார்கள் இதை எந்த காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், செய்தியாக வெளியிடவில்லை என்று வைகோ ஊடகங்களை குறை சொல்வது எப்படி சரியாகும். இதெல்லாம் ஒரு செய்தியா!!!??? இந்த செய்தியில் மக்கள் மீதான அக்கறை துளியும் இருக்கிறதா!!!???? என்று ஊடகங்கள் கேட்பது சரிதானே!!!!??? இதற்காகவே ஊடகங்கள் வைகோ’வை விமர்சிக்களாம்.

மதுவிலக்கு
தர்மபுரி பேருந்து எரிப்பு
தினகரன் அலுவலக எரிப்பு
சொத்து குவிப்பு
2ஜி
ஈழம்
முள்ளிவாய்க்கால்
காவிரி
முல்லை பெரியார்
தாது மணல்
கிரானைட்
மீத்தேன்
நியூட்ரினோ
கூடங்குளம்
ஊழல்
கமிஷன்
லஞ்சம்
நீர்நிலை ஆக்கிமிப்பு
இலவச மருத்துவம்
இலவசக் கல்வி
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
தர்மபுரி இளவரசன்
உடுமலைப்பேட்டை சங்கர்
கோகுல்ராஜ்
விஷ்ணுப்பிரியா
ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை
ஏழுபேர் விடுதலை
ஸ்டெர்லைட்
ஆற்றுமணல் கொள்ளை
வெள்ளம்

இதை எதைப்பற்றியும் கவலைப்ப்டாமல் காசு வாங்கிட்டு வாக்கு செலுத்தியவர்களும், வாக்கு செலுத்தாதவர்களும், இரண்டு ஆண்ட கட்சிகளை தூக்கி சுமக்கும் ஊடகங்களும், நடுநிலையாளர்களும், வலைதள மீமிஸ் புரட்சியாளர்களும் வைகோவை விமர்சிப்பதில் தப்பே இல்லை.

ஏன் என்றால் உங்கள் அனைவரின் அனைத்து விமர்சனங்களையும் கடந்து மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராட்ட களத்தில் முதல் ஆளாக நிற்பவர் வைகோ’வாகத்தான் இருக்கும். அதற்காகவே நீங்கள் அவரை விமர்சிக்களாம்.

Add Comment