கடையநல்லூரில் TNTJ சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்று வந்த கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 20ம்தேதி அன்று நிறைவு பெற்றன.

நடு அய்யாபுரம் தெரு வில் முதல் முறையாக எழுச்சியுடன் முடிவுற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி….!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பஜார் கிளை சார்பாக கடந்த மே-2 முதல் 15 வரை மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.பயிற்சி வகுப்பின் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விதமாக 20/05/2015 அன்று வெள்ளிக் கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸ் வளாகத்தில் வைத்து ## நிறைவு விழா மற்றும் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சதாம் ஹுசைன் அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும்…,உஸ்மான் அவர்கள் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பிலும் இறுதியாக இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி:ஒலி misc அவர்கள் மறுமை வெற்றிக்கு வித்திடும் மார்க்கக் கல்வி என்ற தலைப்பிலும் எழுச்சிஉரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வெற்றி பெற்ற மாணவ மணவிகளுக்கும்,பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன…!

இதில் மாவட்ட நிர்வாகி சாகிப்..,கடையநல்லூர் அனைத்துக் கிளை நிர்வாகிகளான : பாதுஷா,அபூபக்கர்,சிராஜ்,குத்தூஸ்,சேகனா,அமீன்,ஒலி,அமீன் ஆகிய ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

13227205_533042190231665_2192787596941184057_n 13260124_533042153565002_8822242025170841475_n 13267890_533042140231670_3136993557447321867_n

Add Comment