கடந்த ரெண்டு நாளா வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது…

13267694_533093176883499_4620280142620221543_n

கடந்த ரெண்டு நாளா வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன.

1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ?

2. அவர் திமுகவையோ, அதிமுகவையோதான் ஆதரிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் உண்டா ? அவர் தன் செயல்பாடுகளை திட்டமிடவும்,, முடிவெடுக்கவும் உரிமை அற்றவரா ?

3. வைகோ என்று ஒருவர் அழைத்த ஒரே காரணத்திற்காக மட்டுமே கம்யுனிஸ்டுகள், சிறுத்தைகள், தேமுதிகவினர் ஒரே கூட்டணியில் இணைந்தார்களா ? அவர்களுக்கு என்று சுய முடிவு இல்லையா ? அல்லது அந்த அளவுக்கு அவர்கள் சிறு பிள்ளைகளா ? தேர்தல் அரசியல் தெரியாதவர்களா ?

4. பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி பலத்திலேயே வென்று ஆட்சியை பிடித்த திமுகவுடன் இந்த முறை கூட்டணி சேராமல் தனியே அக்கட்சிகளை பிரித்துவிட்டார் வைகோ என்று அவர்மீது கோபம் கொள்வதைவிட அதிமுக போல தனிப்பலம் பெற்று திமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இந்த திமுக
சமூக வலைதள ஆதரவாளர்களால் ஏன் தலைமையை வலியுறுத்த முடியவில்லை ? அவ்வாறு ஏன் தலைமை செய்யவில்லை? இனி கூட்டணி தயவின்றி தேர்தலில் வெல்வோம் என்றுதானே முடிவெடுக்க வேண்டும் ? இதற்கு எதற்காக பக்கத்துக்கு வீட்டு வைகோவின் மீது பாய வேண்டும் ?

5. வைகோ பணம் வாங்கி விட்டு தங்களுக்கு தோல்வியை தந்துவிட்டார் என்று புலம்புபவர்கள் அந்த அளவுக்கு தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறார்களா ?

6. அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்னேகால் கோடியை தாண்டுகிறது. திமுகவின் உறுப்பினர் ஒரே கோடியை தாண்டி விட்டதா ? அதை அதிகரிக்க சமூக வலைதள திமுகஆதரவாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? பாரம்பரிய திமுகவுக்கு பிறகு உருவானதே அதிமுக. அக்கட்சி எப்படி இப்படி வளர்ந்தது ? திமுகவால் ஏன் அவ்வாறு வளர முடியவில்லை ? இதற்கான பதில் என்ன ?இதைவிடுத்து மதிமுக மீது எரிந்து விழுந்து என்ன லாபம் ?

7. திமுக தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணிக்கு விழுந்த வோட்டுகள் போலவே நோட்டாவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

8. மேற்கு மண்டலத்தில் இன்னும் வலிமை பெற முடியாத நிலையில்தான் திமுக உள்ளது.

9. இதை எல்லாம் தாண்டி அதிமுக அரசின் ஒரு பலன் கூட மக்களுக்கு செல்லாமலா அவர்கள் வாக்களித்து உள்ளார்கள் ? அதாவது performance அடிப்படையில் பார்க்காமல் வெறும் பணம் மட்டுமே வாங்கிக்கொண்டு வாக்களித்தார்கள் என்றாலும்கூட இதில் வைகோவின் பங்கு என்ன ?

10. ஆக மொத்தம், இது முதுகு வலியா, திருகு வலியா என்று தெரியாமால் அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைப்பதை தவிர வேறு என்ன ?

11. ஒருவேளை மக்கள் நலக்கூட்டணியின் பிற தலைவர்களே வைகோவின் மீது குறை கூறினால், அது சந்தர்ப்பவாதமே தவிர அறிவார்ந்த குற்றச்சாட்டாக இருக்க முடியாது எனும்போது திமுகவினர் வைகோ மீது குறை கூறுவது அவலை நினைத்து உரலை உடைப்பது போன்றது ஆகாதா ?

– விஷ்வா விஸ்வநாத்

Comments

comments

Add Comment