தமிழக அமைச்சரவையில் நிலோஃபர் கபில் அமைச்சராக நியமனம்

தமிழக அமைச்சரவையில் மேலும் நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக டாக்டர் நிலோஃபர் கபில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேவூர் எஸ். ராமச்சந்திரனும், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காதி, கிராம தொழில் துறை அமைச்சராக ஜி. பாஸ்கரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் ஆர். காமராஜ் வசம் கூடுதலாக இந்து சமய அறநிலையத்துறை இருந்தது, அமைச்சர் செல்லூர் ராஜூ வசம் கூடுதலாக தொழிலாளர் நலத்துறை இருந்தது.
அமைச்சர் துரைக்கண்ணு வசம் கூடுதலாக கால்நடைத்துறை இருந்தது. இவர்கள் வசமிருந்த துறைகள் தனியாக பிரிக்கப்பட்டு நான்கு புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என சர்ச்சை வெடித்து. இந்த நிலையில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜெயலலிதா அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 4 பேரும் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளனர்.

Add Comment