ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்

தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு கட்சி எதிர்க்கட்சியாகியுள்ளது இதுவே முதல் முறை என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படும் என அக்கட்சி தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு கருணாநிதி தான் காரணம்.

அவர் மட்டும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றார்.

Add Comment