எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சட்டசபை குழுவின் துணைத் தலைவராக துரைமுருகன்; கொறடாவாக சக்கரபாணி; துணை கொறடாவாக கு. பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக குழுவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரே சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். கடந்த சட்டசபை தேர்தலில் திமுக 23 இடங்களில்தான் வென்றது.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்திருந்தது. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்தார். தற்போதைய தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.

Comments

comments

Add Comment