இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10மணிக்கு வெளியிடப்படும்‬

இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10மணிக்கு வெளியிடப்படும்‬
***************************************
இன்று வெளியாகும் SSLC(10ஆம் வகுப்பு) – 2016 தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
***************************************
என்ன நிகழ்ந்தாலும் சரி….
நம்பிக்கை ஏற்படுத்துங்கள்
***************************************
இன்று 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளிவர உள்ளன

மதிப்பெண் குறைந்து போனாலும்
ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெற
இயலாமல் போனாலும் உங்கள்
பிள்ளைகளை திட்டாதீர்கள்

மதிப்பெண்களை வைத்து தமது
பிள்ளைகளின் திறனை எடை போடுவது
போன்ற முட்டாள்தனம் வேறில்லை

குழந்தைகள் அல்லாஹ்வின் அமானிதங்கள்
எந்த உயிரினத்தையும் அல்லாஹ் வீணாக
படைக்கவில்லை. தக்க காரணத்துக்காக
பல விதமான ஆற்றலோடு படைத்துள்ளான்

இந்த பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக
படைக்கப்பட்டுள்ள நமது பிள்ளைகளை
(மனிதர்களை)……….

பொருளாதார வெறி ஏற்றப்பட்ட
பந்தைய குதிரைகளை உருவாக்கும்
இன்றைய கல்வி முறையில்
வழங்கப்படும் மதிப்பெண்களை வைத்து
அவர்களின் திறனை எடை போடுவது
போன்ற மிக கேவலமான செயல்
வேறில்லை

நம்பிக்கை ஏற்படுத்துங்கள்
என்ன நிகழ்ந்தாலும் சரி….

அந்த நம்பிக்கை தான் நாளைய
சாதனையாளர்களாக உங்கள்
பிள்ளைகளை உருவாக்கும்.

Add Comment