நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நான்கு புதிய அமைச்சர்கள் கவர்னர் மாளிகையில் இன்று பதவி ஏற்றனர். பாஸ்கரன் காதி கிராமத்தொழில் துறை அமைச்சராகவும் , நிலோபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ணா ரெட்டி கால்நடை பராமரிப்புதுறை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டனர்.கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ரோசைய்யா இவர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

Add Comment