வெளிநாட்டில் பணிபுரியும் ஆடவர்களின் மனைவியாக வேண்டும்…

hqdefault

மனைவியாக வேண்டும்
அதுவும் வெளிநாட்டில் பணிபுரியும்
ஆடவர்களின் மனைவியாக வேண்டும்

விடுமுறை முடிந்து வேலைக்கு
திரும்பும் நாள் வரும்போது
மெல்ல அருகில் வந்து இரு உதடுகளும்
துடிக்க கேட்க்கும் அந்த கேள்வி…
என்னங்க லீவு கொஞ்சம் அதிகம
கேட்டா கிடைக்குமா ..

பயணம் போகும் நாள் இரவு
கொஞ்சம் தூங்க விடாமல் அப்போ
இனிமே அடுத்த லீவு எப்ப தருவான்
என்று நூறாவது முறையாக ஒரே
கேள்வியை …இன்னும் ஒரு வருஷம் கழிஞ்சா
லீவு கேட்டா கிடைக்குமா … என்று மாற்றி
மாற்றி கேட்கும் அந்த சிறுபிள்ளைதனமான
கெஞ்சல் …அவள் வெளிநாட்டுகாரன் மனைவி

இந்த சட்டை உங்களுக்கு பெரிசா இருக்கு
இது இங்கே கிடக்கட்டும் என்று ஒரு உடை வியர்வையோடு உள்ள அன்று போட்டிருந்த சர்ட்
நமது ஞாபமாக தன்னோடு வைத்துகொள்ளும்
வெளிநாட்டுகாரன் மனைவி….

இந்த சேலை கலர் பாருங்க இதே மாதிரிதான்
எனக்கு வேணும் என்று அறையின் கதவில் நின்று
ஒரு முறை அழைக்கும் அந்த பயண நேரத்தில்
அது சேலையின் கலர் காட்ட அல்ல …இன்னும் ஒரு முறை
முத்தம் கொடுக்க அழைக்கும் அந்த வெளிநாட்டுகாரன்
மனைவி…அது அவளுக்கு மட்டுமே வந்த கலை…

பயணத்தின் படியிறங்கும்போது கொஞ்சம்
நில்லுங்க ..என்று சொல்லி ஒரு நிறைகுடம் தண்ணீர்
எடுத்து வந்து வாசல்படியில் வைத்து நிறைகுடம்
முன்பு இறங்கிபோகனும் என்று எதிர்பார்க்கும்
அறியாமை நிறைந்த மனைவி அவள் வெளிநாட்டுகாரன்
மனைவி …..

காரில் ஏறி போகும், போது அவள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவது..அது யாரும் பாக்குமுன்பு சேலை தலைப்பில் நெற்றி வேர்வையோடு துடைப்பதும்
அவள் வெளிநாட்டுகாரன் மனைவி..

கார் வீட்டின் வளைவில் திரும்பும் போது கார் கண்ணாடியில் அவள் தலை தெரிவது …எல்லோரும் போனபின்பும அவள் மட்டும் …..
அது வெளிநாட்டுகாரன் மனைவி .

இன்று வெள்ளிகிழமை மச்சான் போன் வரும்
துணி துவைக்கும்போதும் ஜன்னல் ஓரத்தில் போன்
அம்மி அறைக்கும்போதும் ஆட்டுகல் மீது போன்
அடுக்களையில் திட்டின் மீது போன் அது எந்த நிமிஷமும் வரலாம் ….வருமோ ..அது வெளிநாட்டுகாரன் மனைவி ……

இன்னைக்கு போன் வந்தால் கேட்கணும் காலையில்
எனக்கு போன் செய்யலாம்தானே …தூக்கம் பெரிசா
நான் பெரிசா …முதல்லேயே கேட்க்ககூடாது
போனவாரம் சலாம் சொல்லாம பேசினதுக்கே கோபம் வந்திரிச்சி …..என்று திடுக் திடுக் நெஞ்சிடிப்புடன்
வெளிநாட்டுகாரன் மனைவி……

உனக்கு என்னவேணும் கேள் என்று அவர் கேட்டால்
ஒரே பதில் கேட்டால் சம்மதிக்கணும் முடியும்னா
கேட்கிறேன்னு சொல்லணும் ..அப்படி அவர் சம்மத்தித்தால்….அப்போ கேட்கிற ஒரே கேள்வி
இனிமே நீங்க வெளிநாட்டுக்கு போகம என்னோட இருப்பீகளான்னு ….

அது…அது ..வெளிநாட்டுகாரன் மனைவி…..

Add Comment