61 சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைது : இந்திய கடற் படையின் சாதனை!

அரபிக் கடல் பகுதியில் இந்திய கடல் எல்லை பகுதியில் சென்று கொண்டிருந்த சோமாலியா கடற் கொள்ளையர்களின் கப்பலை இந்திய கடற் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அதில் இருந்த 61 கடற்கொள்ளையர்களை கைது செய்தனர்.

கடலில் பயணம் செய்யும் சரக்கு கப்பல்களையும், அதில் பயணம் செய்யும் ஊழியர்களையும் சோமாலியா கடற் கொள்ளையர்கள் சிறைபிடித்து வருகின்றனர். பிணைத் தொகை பெற்ற பின் அவர்களை விடுவிக்கின்றனர். இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்திய சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய பெருங்கடலில் மற்ற நாட்டு கடற்படை கப்பல் களுடன் சேர்ந்து இந்திய கடற்படை கப்பலும் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. அதற்கான Buy Lasix முடிவு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி இந்திய கடற்படையின் “ஐ.என்.எஸ். குக்ரி” என்ற போர்க் கப்பல் ரோந்து சுற்றி வந்தது. அப்போது அரபிக் கடல் பகுதியில் இந்திய கடல் எல்லை பகுதியில் 400 கடல் மைல் தொலைவில் சோமாலியா கொள்ளையர்களின் கப்பல் சென்று கொண்டிருந்தது.

அதைப் பார்த்த கடற் படையினர் அக்கப்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அதில் இருந்த 61 கடற்கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்கள் கடத்தி செல்ல முயன்ற ஒரு கப்பலையும் மீட்டனர். அதில் கொள்ளையர்களால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 13 பேரை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட 61 கொள்ளையர்களும் மும்பை மற்றும் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Add Comment