கடையநல்லூரில் மூடப்படாமல் இருந்த குழி மூடல்… நகராட்சிக்கு நன்றி

கடையநல்லூர் நகராட்சிக்கு நன்றி

கடையநல்லூர் மதினா நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் பொது பாதையில் வடிகால் வாரிய குழி மூடப்படாமல் இருந்து வந்தது.

இந்த வடிகால் வாரிய குழியை மூட கோரி கடையநல்லூரில் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லுர் மதினா நகர் கிளை சார்பாக நகராட்சியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதனை கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் இன்று அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கட்சிகளாலும் இயக்கங்களாலும் மக்கள் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பிரச்சினையில் ஒவ்வொரு இயக்கமும் முனைப்பு காட்டி செயலாற்றியது மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இது போன்று மக்கள் பிரச்சனையில் கடையநல்லூரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல இயக்கங்கள் பணியாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

13260245_1024617330926869_8060601457032042463_n

13312814_944929745624086_1694228531576794635_n

13319865_944929715624089_5623595780363679423_n

13321881_944929768957417_2706125965816741968_n

Add Comment