கடையநல்லூரில் குப்பை கூடங்களுக்கு நடுவே அரசு குழந்தைகள் பள்ளி சத்துணவு மையம்!

கடையநல்லூரில் குப்பை கூடங்களுக்கு நடுவே அரசு குழந்தைகள் பள்ளி சத்துணவு மையம்!

கடையநல்லூரில் சமீபத்திய கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனியார் கல்வி நிறுவங்கள் பல்வேறு மாற்றங்களை கொண்டு தங்களின் பள்ளிகளையும் படிப்பு முறைகளிலும் மாற்றங்களை கொண்டு வரும் இந்த சூழலில்.

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகின் நிலைகள் எப்படி உள்ளது என்று பாருங்கள்.

இதோ இங்கே ஒரு அவல நிலை. ஆம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மங்கம்மா தெருவில் அமைந்துள்ளது இந்த பள்ளி.

அரசு சார்பில் நடத்தப்படும் சிறுவர்களுக்கான பள்ளி மற்றும் சத்துணவு நிலையம்.

இங்கே பாருங்கள் பள்ளியின் சூழ்நிலை எப்படி உள்ளதென்று. குழந்தைகள் உட்கார தரை உடைந்துள்ளது, வண்ணம் பூசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது, கழிப்பறை செயல்படவில்லை,பாதுகாக்க பட்டகுடி நீர் வசதி இல்லை, அருகில் நகராட்சியின் குப்பை தொட்டி.

இதுதான் இன்றைய இந்த பள்ளியின் அவல நிலை. எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தங்களது பிள்ளையை இந்த பள்ளியில் சேர்பார்களா ?

இது வரை அரசு பள்ளிகள் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தப்படும் என்று சொல்லி ஒதுக்கிய நிதிகள் எங்கு போனது?

இந்த பதிவின் நோக்கம்

இதை பல்வேறு தளங்களில் பகிர்வதின் மூலம் அரசின் கவனித்திற்கு கொண்டு சென்று, இந்த பள்ளியை நல்ல முறையில் உருவாக்கிட நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் வீரியமிக்க இணையதள செய்திகளின் மூலம் எத்தனையோ பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்ட நாமும் நம்மளால் முடிந்த சிறு உதவிகளை செய்து இந்த சிறு மழலைகள் படிப்பிற்கு உதவி புரிவோம்.

இந்த பள்ளிக்கு உதவி செய்ய விரும்பினால். உதவி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் kdnl.org@gmail.com என்ற முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்,இயன்றதை செய்வோம்.

இந்த செய்தியை வெளிச்சம் போட்டு காட்ட உதவிய நண்பர் ஜெயசிங் அவர்களுக்கு எங்களின் நன்றியை தெருவித்து கொள்கிறோம்

IMG_20160430_112044 IMG_20160430_112117 IMG_20160430_112134 IMG_20160430_112200 IMG_20160430_112240 IMG_20160528_092908 IMG_20160528_094806

Add Comment