கடையநல்லூர் தாலுகா கட்டுமானம் பணி தீவிரம்?

சத்தமில்லாமல் கடையநல்லூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணி தற்போது காசிதர்மம் அருகில் நடைபெற்று வருகிறது.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சி வேட்பாளர்களும் தாலுகா நிரந்தர கட்டிடம் நகரின் மையப் பகுதியில் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். அதன்படி திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் வெற்றி பெற்றுள்ளது.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தாலுகா கட்டுமானம் பணி நடைபெறுவது குறித்து தெளிவு படுத்த வேண்டும்.

அதன்படி வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தாலுகா கட்டிடடம் நகரின் மையப் பகுதியில் அமையும் என தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் சொல்லி வருகிறார்.

ஆனால் காதிதர்மம் ரோடு அருகில் காட்டுப்பகுதியில் கட்டுமானம் பணி கடந்த இரண்டு நாட்களாக சத்தமில்லாமல் நடை பெறுகிறது.

இது குறித்து உடனடியாக இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் தலையிட்டு மக்கள் பயன்பெறும் வகையில் நகரின் மைய பகுதியில் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

செய்தி: படம், குறிச்சி சுலைமான்

WhatsApp-Image-20160529 (1) WhatsApp-Image-20160529

Add Comment