கடையநல்லூரில் காங்.,போட்டிகாங்.,தொண்டர்கள் மகிழ்ச்சி

கடையநல்லூர் தொகுதி காங்., கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து போட்டியிட முடியாத நிலை இருப்பதால் திமுகவினர் அப்ஷெட்டாகி இருப்பதை காண முடிகிறது.காங்., போட்டியிடக்கூடிய தொகுதிக்கான அறிவிப்பு நேற்று காலை வெளியானது. தி.மு.க. கூட்டணியில் கடையநல்லூர் தொகுதி மீண்டும் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இத்தொகுதியில் காங்., கட்சி சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.,வான பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட கூடுமென பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.காங்., கட்சிக்கு கடையநல்லூர் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியானவுடன் தொகுதி அளவில் உள்ள காங்., கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சில பகுதிகளில் காங்., கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இத்தகைய நிலையில் கடந்த 96ம் ஆண்டிற்கு பிறகு கடையநல்லூர் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் இந்த தேர்தலில் கட்சி தலைமை அதற்கான வாய்ப்பினை வழங்கும் என திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காங்., கட்சிக்கு கடையநல்லூர் ஒதுக்கப்பட்டதால் Ampicillin online சில திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அப்ஷெட்டாகினர்.

Add Comment