பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

கடையநல்லூர் மே 29 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆண்டு தோறும் 10 ம் வகுப்பு மற்றும்
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நகரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பணமும் கேடையமும் கொடுப்பது வழக்கம் அதன்படி டவுண் கிளை சார்பில் இந்த ஆண்டு நகரில் முதல் மூன்று இடம் பிடித்த ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவர்கள் முஹம்மது இஸ்ஹாக் 1149 , பாத்திமா 1138, குருவித்யா1132 அதுபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நபிஸத்துல் நூரா 488 , செய்யது மசூது 487 மற்றும் தாருஸ்ஸலாம் மேல்நிலைபள்ளி மாணவன் முஹம்மது பஷீர் 486 ஆகியோர்களுக்கு கடையநல்லுர் காவல் துறை ஆய்வாளர் பத்மநாபபிள்ளை பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார்

இந்நிகழ்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர், கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பா, துராப்ஷா, அஜீஸ் மற்றும் பஜார் கிளை குறிச்சி சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி படம் குறிச்சி.

13245397_946061282177599_3000135216971323294_n 13305257_946061428844251_5045394188572005013_o 13320720_946061358844258_358762687574982853_o

Add Comment