முதல் நாளே அதிரடி காட்டும் கடையநல்லூர் MLA

முதல் நாளே அதிரடி காட்டும் கடையநல்லூர் MLA

 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூரில் திமுக கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்று திரும்பியிருக்கிறார் கே .ஏ .எம்.அபூபக்கர்.

 

கடையநல்லூர் தொகுதி வாக்காள பெருமக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கடையநல்லூர் வந்த அபூபக்கருக்கு இந்தியன் யூனியன் முஸ்லீக் மற்றும் தோழமை கட்சி சார்பில் சிறப்பான வரவேற்ப்பு அழைக்கப்பட்டது.

13315659_1013499332020350_5897206598042555444_n 13310339_1013498472020436_534052457140753522_n

 

கடையநல்லூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மிகவும் கொடூரமான விபத்து நடந்தது, இதனை  உடனடியாக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு  சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து எவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளபடுகிறது என்று கேட்டறிந்தார்.

 

13244826_1013523552017928_285288048404506183_n 13319809_1013523498684600_8478751756604828610_n

 

இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில், நான் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும்  சட்டமன்ற உறுப்பினர் எனவும் தொகுதி வளர்ச்சிக்காக தேவைபட்டால் முதலமைச்சரையும் சந்திப்பேன் எனவும் அதிரடி காட்டினார்.

 

13254270_883667401756129_5080382774173574633_n 13307435_599202416924631_7580872527396806462_n

 

 

மேலும் கடையநல்லூர் தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பில் பங்கேற்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

13263935_1028067303935228_2913112082785103249_n WhatsApp-Image-20160527 (5)

 

 

கடையநல்லூர் அரசினர்  கலைகல்லூரி நீண்ட நாட்களாக கிங் யுனிவெர்ஸ் நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.  நீண்ட நாட்களாக கல்லூரிக்கு வாடகை கொடுக்காததால் உடனடியாக காலி பண்ண வேண்டும் என கோர்ட் ஆர்டர் படி காலி பண்ண வேண்டிய சூழ்நிலையில். அந்த நிறுவனத்தின் முதல்வரை சந்தித்து கல்லூரி தொடர்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். மேலும் அரசினர் கலை கல்லூரியை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடத்தலாம என்ற வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

 

 

13263682_232419193806969_4733187936781026392_n

 

எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட கலக்டர் கருணாகரனை சந்தித்து அரசினர் கல்லூரிக்கு நகரின் மைய பகுதியில் இடம் அமைத்து கல்லூரிக்கு நிரந்தர இடத்தில் அமைத்து தர ஆவன செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

 

13332991_233039350411620_1863979076571902799_n

 

மேலும் தாலுகா அலுவலகம் நகரின் மைய பகுதியில் அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டியும் கேட்டு கொண்டார்.

 

இதனை தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளை சந்தித்து நகரின் சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சனைகள் பற்றி கேட்டற்றிந்து , மக்கள் குறைகளை நிவர்த்தி பண்ண நடவடிக்கை எடுக்க எட்டு கொண்டார்.

 

 

13327444_600709050107301_2088303738655966874_n13344511_600700846774788_8380936728406423575_n

 

 

இப்படி ஆரம்பமே மக்கள் பணியில் துரிதமாக செயலாற்றி கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரின் பணி கடையநல்லூர் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 

இதற்கிடியே கட்சி கொடி  ஏற்றம் இஸ்லாமிய கல்லூரியில் நடைபெற்ற  வரவேற்ப்பு என கட்சி தொண்டர்களிடம் புது ரத்தம் பாய்ச்சி கொண்டிருக்கிறார்.

 

13254362_231467513902137_83219487030014016_n
13307372_600213430156863_8989274753730056549_n13315386_231467467235475_6577187353271400817_n 13319751_231476043901284_6299322211909342708_n

 

 

லீக் ரெம்ப வீக் என்ற காலம் போய் இன்று முஸ்லீம் லீக் தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் வலம்வருவதை பார்க்க முடிகிறது.

 

தொடருமா இந்த அதிரடி…பொறுத்திருந்து பாப்போம்

Add Comment