இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!

இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!

ISLAMIC DEVELOPMENT BANK IDB ஐடிபி இன்னும் சில தினங்களில் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாத்தில் தனது கிளையை துவங்க உள்ளது. இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கியானது வட்டியை பிரதானமாக கைக் கொள்ளாது.

வைப்பு நிதிகளுக்கு வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும். இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.

ஜெத்தாவை தலைமையிடமாக் கொண்டு இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது. இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.

2010 ஆம் ஆண்டு கேரளாவில் இதே போன்ற வங்கியை தொடங்க முயற்சித்தனர். நம்ம சகுனி சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்து அதனை தடுத்தார். தற்போது ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன் இஸ்லாமிக் பேங்குக்கு அனுமதி அளித்துள்ளது சுப்ரமணியம் சுவாமிக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

Comments

comments

Add Comment