கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்

கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்

கடையநல்லூருக்கு முந்தைய பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும்.

கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ‘ஷேர் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் – ‘அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி வகையறா திருக்கோவில்கள்’ என்ற தனியார்களுக்கு பாத்தியப் பட்ட கோவில். தற்போது அரசாங்கத்தின் ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. யில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லலாம். இது கடையநல்லூர் ரயில் நிலையம். இங்கு கோவிலைப் பற்றிய அறிவிப்பும் இருக்கிறது. மதுரை செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மிகவும் வசதியாக இருக்கிறது. மதுரையில் காலை ஏழு மணிக்கு கிளம்புகிறது. இங்கு சுமார் பத்து மணிக்கு வந்து சேருகிறது. அனேகமாக ரயில் முழுவதும் இங்கு காலியாகி விடுகிறது என்று சொல்லலாம். ம்புவதற்கு மதியம் ஒரு மணிக்கு ரயில் இருக்கிறது. மாலை சுமார் ஐந்து மணிக்கு இருக்கும்.

ரயில் நிலையத்திலிருந்து ‘ஷேர் ஆட்டோக்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வரை ஓடுகின்றன. மிகவும் நியாயமான கட்டணத்தில் ஓடுகின்றன. பக்தர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட நண்பர்களாக இருக்கிறார்கள். நாம் செல்லும் பாதை இருமருங்கும் வயல்கள் இருக்கின்றன. நல்ல உயர்ந்த மரங்கள் வழி நெடுக இருக்கின்றன.நல்ல காற்று. கிட்டத்தட்ட ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது. நிறைய பக்தர்கள் நடந்து வருகிறார்கள்.நடப்பது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. சாலை வசதி நன்றாக இருக்கிறது.

சாலையிலிருந்து மேற்கே பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு கிடக்கிறது. அற்புதமான காட்சி.

சாலையில் வடக்கு பக்கத்தில் பெரிய கண்மாய் இருக்கிறது

கோபுரம் அருமையாக கம்பீரமாக இருக்கிறது.
கோவிலும் நம்மை ஈர்க்கிறது. நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு ஜீவசமாதிகள் இருக்கின்றன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்று – சீனிவாச சாஸ்திரிகள் என்று இருக்கிறது. இரண்டாவது – ஞானாந்த சரஸ்வதி கோபாலய்யர்) – 26.9.1939 என்று இருக்கிறது.
மூலையில் வன்னிமரத்தடியில் வினாயகர் இருக்கிறார். வன்னி மரத்தடி வினாயகர் விசேஷம் என்கிறார்கள். சுற்றி வந்தால் அருமையான தியான கூடம் இருக்கிறது. பிரகாரம் அருமையாக, சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.அங்கங்கு குடிநீர் குழாய்கள் இருக்கின்றன. கை கழுவதற்கு அமைப்புக்கள் இருக்கின்றன. குப்பைத்தொட்டிகள் இருக்கின்றன. நன்கு பராமரிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

பிரகாரம் சுற்றி விட்டோம்.சன்னதிக்கு செல்வோம். வரிசையில் நிற்பதற்கு அருமையாக பாதைகள் போட்டு கம்பிகள் வைத்து கட்டப் பட்டிருக்கிறது. நிற்கும் போது காற்று அவ்வளவு சுகமாக இருக்கிறது.
அஞ்சனேயர் தெற்கு பார்த்து காட்சி அளிக்கிறார். அபய ஹஸ்த கோலம். அற்புதமாக இருக்கிறார். காணக் கண் கோடி வேண்டும்.திரும்பத் திரும்ப உங்களை வரவழைக்கும் அபூர்வ சக்தி மிக்கவராக இருக்கிறார். இந்த சன்னதியில் பிரசாதமாக ‘திருநீறு’, தீர்த்தம், துளசி வழங்கப் படுகிறது.இது வித்தியாசமாக படுகிறது.விசாரித்ததில், இங்கு யாகம் வளர்த்த இடம் என்கிறார்கள். அதனால் திருநீறு வழங்கப் படுகிறது என்கிறார்கள். ராமாயணத்தில் லட்சுமணனுக்காக மூலிகை தேடி ஆஞ்சனேயர் வரும் வழியில் தாகத்திற்காக இங்கு இறங்கினாராம். ஆஞ்சனேயருக்காக அங்கிருப்பவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களாம்.இங்கு உள்ள தெப்பம் ஆஞ்சனேயருக்காக தோற்றுவிக்கப் பட்டது என்கிறார்கள். பட்டாஷேபிகத்திற்கு அப்புறம் ராமர், சீதை ஆஞ்சனேயருக்கு காட்சி கொடுத்தார்கள் என்பது வரலாறு.

அதற்கப்புறம் ஆஞ்சனேயர் இங்கிருந்து வரும் பக்தர்களுக்கு ‘அபய ஹஸ்த கோலத்தில் இருந்து பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்.

மற்றொரு சன்னதியில் ‘ராமர், சீதை, லட்சுமணன் பட்டாபிஷேகக் கோலம். கிழக்கு பார்த்த கோலம். அருகில் ஆஞ்சனேயர் இருக்கிறார். அற்புதமான சிலை அமைப்பு. அருமையான சன்னதி. அங்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

இந்த வளாகத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அழகிய தெப்பம் அமைந்திருக்கிறது. படிக்கட்டுகளின் பக்கங்களில் இரண்டு குகை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் மூடி வைக்கப் பட்டிருக்கின்றன

ஒரு மூலையில் பைரவர் சன்னதி இருக்கிறது..

இந்த ஸ்தலத்திற்கு சனிக்கிழமைகளிலும், வியாழக் கிழமைகளிலும் நல்ல கூட்டம் வருகிறது என்கிறார்கள்

Add Comment