கடையநல்லூர் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை

 

கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 27-05-2016 வெள்ளிக் கிழமை முதல் செயல்படத் துவங்கி உள்ளது என்ற செய்தியை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்வலுவலகத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கணினி , ஃபேக்ஸ் , பிரிண்டர் , ஸ்கேனர் வசதிகளும் தொலைத் தொடர்புக்காக வைஃபை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கடையநல்லூர் தொகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுப் பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை எம். எல். ஏ அவர்களிடம் நேரில் தெரிவிக்க இயலாதவர்கள் இந்த அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .உங்களின் புகார் மனுக்கள் தாமதமின்றி உடனுக்குடன் தொகுதி எம் எல் ஏ
கே. ஏ. எம் . முஹம்மது அபூபக்கர் அவர்களின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் மனுதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன .

கடையநல்லூர் தொகுதி எம். எல். ஏ அவர்களின் பணிகள் சிறக்க உங்களின் மேலான அன்பான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

அன்புடன்
எம். எல் ஏ அலுவலகப் பொறுப்பாளர்கள்

அலுவலக வேலை நேரம் : காலை :09-00 to 01-00 & 03- to 07-00

அலுவலக தொடர்பு எண் : 04633243666

Add Comment