குற்றாலத்தில் சீசன் துவங்கிவிட்டது

IMG-20160603-WA0002குற்றாலத்தில் சீசன் துவங்கிவிட்டது. அதிகாலை முதல் குற்றாலம் பேரருவியில் தண்ணீர் விழத் துவங்கியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் சீசன் துவங்குவதற்கு அறிகுறியாக வெயில் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. திங்கள்கிழமை மாலைமுதல் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது.

இதையடுத்து, குற்றாலம் பேரருவியில் தண்ணீர் விழ துவங்கியது. இதேபோல, ஐந்தருவியில் நான்கு கிளைகளில் தண்ணீர் விழுந்தது. ஆனாலும் இரண்டு அருவிகளில் மட்டுமே பயணிகள் குளிக்கக் கூடிய அளவு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகளும், வர்த்தகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மிதமான சாரல் நிலவியது. நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசியது.

Add Comment