SDPI கட்சி மீதும், நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை.!

images

SDPI கட்சி மீதும், நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை.!- மாநில பொதுச்செயளாளர் அப்துல் ஹமீது அறிக்கை.!
images

எஸ்.டி.பி.ஐ கட்சியை களங்கப்படுத்தும் நோக்கில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில நிர்வாகிகள் மீதும், மகளிரணி நிர்வாகிகள் மீதும் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தை சார்ந்த முகமது ரைசுதீன் என்னும் சமூக விரோதி தொடர்ந்து முகநூலில் அவதூறுகளை பரப்பி வருகின்றான். இவை அனைத்தும் பொய்யானவை. அதற்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மறுப்பதோடு, எஸ்.டி.பி.ஐ. கட்சி இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறு பரப்பும் ரைசுதீன், ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதோடு, அவ்வழக்கில் குண்டாஸிலும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது மட்டுமல்ல பல்வேறு சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மீதும் போலியான அவதூறுகளை சமூக விரோதி ரைசுதீன் பரப்பி வருகின்றான். இதுதொடர்பான புகார்களும் அவன் மீது உள்ளன.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை களங்கப்படுத்தும் நோக்கில் முகநூலில் அவன் பதிந்துள்ள பதிவுகளுக்கு எதிராகவும், தொடர்ந்து இதுபோன்று அவன் மேற்கொள்ளும் அவதூறுகளுக்கு எதிராகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப அவனுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்டு வருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சமூக விரோதிகளை சமுதாயம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு

B.அப்துல் ஹமீது,
மாநில பொதுச்செயலாளர்,
SDPI கட்சி, தமிழ்நாடு.

Comments

comments

Add Comment