கடையநல்லூர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கடையநல்லூர் நடுஅய்யாபுரம் தெரு பகுதியிலும் பஜார் பகுதியில் மர்கஸுல் மஃமூர் பள்ளிவாசலிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இரண்டு பகுதியிலும் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.
நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி தயார் செய்து ஆண்களுக்கு தெருவில் போடப்பபட்ட பந்தலிலும் வைத்தும் பெண்களுக்கு வீடுகளிலும் வினியோகம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை நிர்வாகிககள் தலைவர்குறிச்சிசுலைமான், செயலாளர் செய்யது சுலைமான், பொருளாளர் சதாம் உசேன் , துனைசெயலாளர் உஸ்மான், துணைதலைவர் அப்துல்காதர் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தது.
13393921_484092341790515_6759813486520299589_n

13418922_484092175123865_1875668943001321389_n

13419015_484092288457187_7986945930013580393_n

13423935_484092248457191_8920486202286235618_n

Add Comment