கடையநல்லூர் கோல்ட் சூக் (Souk)

தினமும் கடையநல்லூரின் சுற்றுபுர நகர, கிராமங்களிலிருந்து வாடிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் இங்குவந்து   குவிகின்றனர், மொத்த நகை வியபாரிகள் இங்கு படையெடுக்கின்றன.
பெரிய நகரத்தில் உள்ள நகை கடைவீதிகள் தோற்று போகும் அளவுக்கு ஆரவாரமாய் இயங்கும் நகை கடைகள்.
கடையநல்லூர்  முஸ்லிம்கள் அதிகம்
வசிக்கும் ஊர்.
இந்த ஊருக்கு குட்டி துபாய் என்று இன்னொரு பெயரும் உண்டு.கடையநல்லூர் பேட்டை பகுதியில் காதர் மைதீன் பள்ளிவாசல் தெருவின் உள்ளே நுழைந்தவுடன் எதோ மினி அரபு கோல்ட் சூக் போன்று பிரமிக்க வைக்கிறது நகைகடைகள்.
பதினைந்து வருடம் முன்பு இந்த தெரு குடிசை வீடுகள், மாட்டு தொழுவங்கள் என காட்சியளித்தது. தற்ப்போது 100 மீட்டர்  உள்ளாகவே 22 சிறிய பெரிய நகை கடைகள். இப்படி அதிக நகை கடைகளை கொண்டு, தங்க பிரியர்களை தன்வசம் ஈர்த்த இந்த ஊர் ஆரம்பத்தில் பல சோக வரலாறுகளை உள்ளடக்கியது,
மக்கள் பஞ்சத்தால் ஒருவாய் கஞ்சி தொட்டியை சுற்றி நிண்டதும் உண்டு பின்பு தனது பசியை போக்க தரிநெய்து உலக புகல்பெற்ற லுங்கி தயாரித்த கதையும் உண்டு. பல மக்கள் பிழப்பு தேடி, தூபாய், சவூதி என வெளிநாடு சென்றனர். அங்குள்ள திர்கமும், ரியாலும் இந்த ஊரை பணம் புரழும் குட்டி அரபு தேசமாகவே  மாற்றி இருக்கிறது ஆரம்பத்தில் சிலர் வெளிநாட்டு நகைகளை வாங்கி விற்க்க ஆரம்பித்னர் அதில் ஒரு நல்ல வருமானம் கிடைக்கவே பின்பு தர முத்திரையுடன் 916 நகைகள் என வியாபாரம் துவங்கப்பட்டது, வாடிக்கையளர்களும் அதிக தொலைவில் இருந்து வரத் துவங்கினர், மற்ற மக்களும் தங்கத்தில் முதலீடு செய்யளானார்கள் கடைகளும் நாளுக்கு நாள் பெருகி தொழில் சங்கம் என மிகப் பிரமாண்டமாக இயங்குகிறது கடையநல்லூர் கேர்ல்டு சூக்.
Anwardivan

Add Comment