கடையநல்லூரில் விபத்து கேரளா வாலிபர் பலி

கடையநல்லூரில் விபத்து கேரளா வாலிபர் பலி

13417478_1785701928330520_2466678513267826437_n

குழந்தை உட்பட நான்கு பேர் காயம்

கடையநல்லூர் ஜுன் 9: கடையநல்லூர் அட்டைகுளம் அருகே பகல் 1மணிக்கு தெற்கிலிருந்து வடக்கே நோக்கி பைக்கில் வந்த கேரளா வாலிபரும் தெற்கிலிருந்து கொடிக்குறிச்சியை நோக்கி பைக்கில் சென்றபோது இரண்டு பைக்ககுககள் நேர்க்கு நேர் மோதியதில் கேரளா ஆரியங்காவை சார்ந்த அர்ஜுனன் மகன் அபிசேக் (25)தூக்கி வீசப்பபட்டவர் மீது மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் தலையில் ஏறியதில் சம்பவம் இடத்திலேயே பலியானார்.

பைக்கில் பின்னால் இருந்த கேரளாவை சார்ந்த தாமஸ் மகன் பிரவீன்(20) படுகாயம் மற்றொரு பைக்கில் குடும்பத்துடன் சென்ற கொடிக்குறிச்சியை சார்ந்த சுப்பிரமணியதேவர் மகன் கனேசன்(32) இவரது மனைவி சன்முகதாய் (29)மகள் முகிலாதேவி(5)ஆகியோர் காயமடைந்தனர்.

இவர்களுக்கு கடையநல்லூர் அரசு மருந்துவமனையில் சிகிச்சை அளித்து தென்காசி அரசு மருந்துவமனை அனுபிவைத்தனர் கடையநல்லூர் காவல் துறை விபத்து குறித்து விசாரித்து வருகிறது.

Add Comment