கூடங்குளத்தில் இன்னும் 3 மாதத்தில் மின்உற்பத்தி துவங்கும் ஜப்பான் போல பாதிப்பு ஏற்படாது என அதிகாரி தகவல்

ஜப்பான் அணுஉலைகளுக்கு ஏற்பட்டது போல பாதிப்பு கூடங்குளம் அணுஉலைகளுக்கு வராது என கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநர்காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் 14 ஆயிரம் கோடி செலவில்ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகளின் கட்டுமான பணிகள் நடந்துவருகிறது.முதல் அணுஉலையில் இந்த மாதம் மின் உற்பத்தி துவக்குவதாக இருந்தது. வரும் அக்டோபரில்இரண்டாவது அணுஉலை மின் உற்பத்தி துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஜப்பானில் சுனாமியினால் பிகுஷிமா அணுஉலைகளில் இரண்டில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கதீர்வீச்சு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானை போல இந்தியாவில் கடலோரங்களில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளுக்கு பாதிப்பு வருமா என்ற பீதி உள்ளது.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ஜப்பான் அணுஉலைகள் 1971ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டதாகும். பூகம்பம் ஏற்படும்போது தானாகவே உற்பத்தியை நிறுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. சமீபத்திய சுனாமி தாக்குதலால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்ட உடன் மின்சப்ளையும் நின்றுபோனது. இதனால் ரியாக்டர் எனப்படும் அணுஉலைகளில் நிலவும் கடுமையானவெப்பத்தை குறைக்கும் குளிர்விப்பான்கள் செயல்படாமல் போனது. உடனடியாக டீசல் ஜெனரேட்டர் மூலம் குளிர்விப்பான்கள் செயல்பட்டாலும் சுனாமி தண்ணீர் உள்ளே வந்ததால் டீசல் ஜெனரேட்டரும் ஒரு மணிநேரத்திற்குள் பாதிப்பிற்குள்ளானது. எனவேதான் ஹைட்ரஜன் உருவாகி வெளிவட்டத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. யுரேனியம் உருகாததால் கதீர்வீச்சு ஏற்படவில்லை. ஆனால் ஜப்பான் அணுஉலைகளுடன் ஒப்பிடும்போது கூடங்குளம் அணுஉலைகள் சமீபத்திய தொழில்நுட்பத்தில் செயல்பட உள்ளது. ஒரு அணுஉலையை குளிர்விக்க ஒன்றுக்கு பதிலாக 4 டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளன. அணுஉலை வளாகம் கடல்மட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளது.அந்த மட்டத்தில் இருந்து 52 மீட்டர் உயரத்தில் ரியாக்டர் எனப்படும் அணுஉலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் ரியாக்டர் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையில் சுனாமி பாதிப்பினால்இதுவரையிலும் 3 மீட்டர் உயரத்திற்கே அலைகள் எழுந்துள்ளன. தமிழகம் சுனாமி என்ற ஆபத்தை அறியும் முன்பாகவும், அமெரிக்காவில் இரட்டைகோபுரம் தகர்ப்பிற்கு முன்னரே கூடங்குளம் அணுஉலைகள் வடிவமைக்கப்பட்டாலும் அத்தகைய பேராபத்துகளை தாங்கும்வண்ணம்அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பூகம்ப பேராபத்துகளின் தன்மைகள் குறைவானதாக இருந்துள்ளது. Buy cheap Doxycycline

எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்தில்திட்டமிட்டபடி உற்பத்தி துவங்கும் . கூடங்குளத்தை சுற்றி 16 கி.மீ.,சுற்றளவு கிராம மக்களுக்கு ஆபத்து கால பயிற்சி வகுப்புகளை துவங்க உள்ளோம்.
முதற்கட்டமாக கிராம அதிகாரிகள் மட்டத்தில் பயிற்சி வகுப்புகளை துவக்க உள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் எரிபொருள் நிரப்பப்படாத சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் ஒன்றரை மாதத்தில் எரிபொருள் நிரப்பப்படும். இன்னும் 3 மாதத்தில்வணிகரீதியான மின் உற்பத்தி துவங்கும் என்றார். பேட்டியின் போது நிலைய இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், முதன்மைப்பொறியாளர் ஜின்னா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Add Comment